/* ]]> */
Sep 212016
 

உருளைக்கிழங்கு-பசலைக்கீரை க்ரேவி- செய்வது எப்படி?

potato-n-spinach-gravy

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை- 1 கட்டு; மீடியம் ஸைஸ் உருளைக்கிழங்கு வேகவைத்து துண்டுகளாக்கியது-4; பொடியாக நறுக்கிய வெங்காயம்-1; பொடியாக நறுக்கிய தக்காளி-1; பூண்டு பற்கள்-4 பொடியாக நறுக்கியது; இஞ்சி-1/2 இஞ்ச் நசுக்கியது; பச்சை மிளகய்-2; கிராம்பு-2; பட்டை-1 இஞ்ச்; பிரிஞ்சி இலை-1; மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்; கரம் மசாலா பௌடர்-1 ட்ஸ்பூன்; சிவப்பு மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்; பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை; கடலை ஆவு- 1 டேபிள் ஸ்பூன்; கஸ்தூரி மேதி இலை-1/2 ஸ்பூன்; தண்ணீர்-1 கப்; எண்ணெய், உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

கீரையைக் கழுவி எடுக்கவும். தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். ஸ்டவ்வை அணைத்துவிட்டு கீரையை தண்ணீரில் கலக்கவும். 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடிக்கவும். குளிர்ந்த நீரில் 5 நிமிடம் வைக்கவும்.பச்சை மிளகாய் சேர்த்து மசிகக்வும்.

எண்ணெயை சூடாக்கவும். பிரிஞ்சி இலை, கிராம்பு பட்டை சேர்த்து தாளிக்கவும்.  பொடியாக நறுக்கிய வெங்காயத்தை லைட் ப்ரௌன் கலர் வரும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அத்துடன் தக்காளியையும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துகலக்கவும். 5 நிமிடம் வதக்கியபின், பசலைக்கீரை மசியலைச் சேர்கக்வும். கடலை மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.  ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு கலக்கவும். உப்பு சேர்த்து, லேசான தீயில் சற்று நேரம் வைக்கவும். க்ரேவி இறுகிவரும். உங்களுக்கு விருப்பமான அளவில் தண்ணீரை கூட்டியோ குறைத்தோ க்ரேவியை தயாரிக்கலாம்.

உருளைக் கிழங்குகளைச் சேர்த்து  4 நிமிடம் தீயை லேசாக வைக்கவும். கரம் மசாலாப் பௌடரைத் தூவி, கஸ்தூரி மேதியைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து இறக்கி சூடாக பறிமாறவும்.

^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>