/* ]]> */
Apr 032014
 

இரண்டாம் விபத்து:

BREATHING
சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நபர்களுக்கு முறையான முதலுதவிகளைச் செய்யாததும், சரியன நேரத்துக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் இருப்பதும்தான் ‘ இரண்டாம் விபத்து’ என்கிறது மருத்துவ உலகம்.
விபத்து நடந்து சுமார் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்தை ‘கோல்டன் ஹவர் ‘ அதாவது ‘பொன்னான நேரம் ‘ என்பார்கள். இந்த நேரத்தில் , பாதிகக்ப்பட்டவர்க்கு நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன உதவியும் பொன்னானது.
இன்று ஆள் நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைப் பார்க்கும் நபர்கள் தங்கள் வண்டியை நிறுத்துவதே அரிதாக இருக்கிறது. கண் முன் உயிருக்குப் போராடுபவரைக் காப்பாற்றத் தவறுவதும் கொலைதான். இதைப் பலரும் உணருவதில்லை. அப்படியே உதவ நினைக்கும் நபர் ஆம்புலன்ஸை அழைத்தாலும் அவர்கள் வந்து சேர அதிக நேரம் பிடிக்கும். அதற்குள் பாதிகக்ப்பட்டவருக்கு முதலுதவி கொடுத்து உயிர் காக்கவும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
அவசரகால முதலுதவிப் பயிற்சிகளை பொதுமக்களுக்கு அளிப்பதற்காகவே ‘அலர்ட்’ என்ர அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. விபத்து சமயங்களில் உதவ நினைக்கும் பொதுமக்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லித் தருகிறது இந்நிறுவனம்.
முதலில் பாதிக்கப்பட்டவரிடம் மூச்சு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். நமது காதுகளை அவரின் நாசிக்கு அருகில் கொண்டு போவதின் மூலம் மெல்லிய சுவாசத்தை அறியலாம். அப்படி ஒருவேளை மூச்சு இருக்கிறதென்றால், அவரின் தோள்களைத் தட்டிப் பேச்சுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்’ எங்கே வலிக்கிறது..என்ன செய்கிறது என்று கேட்டுக் கொண்டால் அதற்கு ஏற்றபடி அவரைக் கையாளலாம் . உதாரணத்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் உள் தசைகளைக் கிழித்துவிடும் ஆபத்து இருக்கிறது.
ஒருவேளை மூச்சு இல்லை என்றால் , விபத்து நடந்த அதிர்ச்சியில் இதயம் துடிப்பதை நிறுத்தியிருக்கும் . உடனே ‘இறந்துவிட்டார்’ என்று முடிவு கட்டிவிட வேண்டாம். ‘கார்டியோ பல்மனரி ரிசஸ்சிடேஷன் ‘ எனப்படும் சி.பி.ஆர் சிகிச்சையை உடனடியாக செய்தால் மீண்டும் இதயம் துடிக்க வாய்ப்பு இருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் மார்புக்கு நடுவே நமது வலது உள்ளங்கையை வைத்து அதற்கு மேல் இடது கையால் முட்டுக்கொடுத்து அழுத்தம் தருவதுதான் சி.பி.ஆர். சிகிச்சை. இரண்டு அங்குலம் வரை மார்பு இறங்கி ஏறும்படி தொடர்ந்து இப்படி அழுத்தம் தரவேண்டியது முக்கியம். இந்த அழுத்தங்களால், இதயம் மீண்டும் துடிக்க் நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதுவரை ‘அலர்ட்’ அமைப்பு 25,000 பெருக்கு இந்த பயிற்சியை வழங்கியிருக்கிறது.
சினிமாக்களில் விபத்துக்குள்ளானவரின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதையும் வாயில் தண்ணீர் ஊற்றுவதையும் காட்டுகிறார்கள். இவை முற்றிலும் தவறான நடவடிக்கைகள் . விபத்துக்குள்ளானவர் மூச்சிறைத்துக்கொண்டிருக்கும்போது தெளிக்கப்படும் தண்ணீர் சுவாசத்தை தடை செய்யலாம். மயக்க நிலையில் இருப்பவர்களின் நாக்கு தன் நிலையிலிருந்து சரிந்து உணவுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி இருக்கும். இந்த நேரத்தில் வாயில் கொடுக்கப்படும் நீர் , உணவுக் குழாய்க்குப் போகாமல், சுவாசக் குழாயில் போய் அடைப்பை ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் தவிர்த்து , முதலுதவி முறைகளை நன்கு அறிந்திருப்பவர் விபத்து சமயங்களில் ஒரு டாக்டரைவிடவும் முக்கிய பங்காற்ற முடியும் .
*****************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>