/* ]]> */
Sep 132019
 

உயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன?

mountaineering

கடல் மட்டத்தில் சதுர சென்டிமீட்டருக்கு சுமார் 1.03கி.கி. காற்றழுத்தம் உள்ளது இந்த அழுத்தத்தில் நுரையீரல் ஜவ்வு வழியாக எளிதில் ஆக்ஸிஜன் ரத்தத்தில் கலக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2.637 மீட்டர் உயரத்தில் இருக்கும் தொட்டபெட்டா சிகரத்தில் , காற்றழுத்தம் கடல் மட்டத்தைவிட சுமார் 26 சதவிகிதம் குறைவு.  இங்கே உள்ள குறைந்த காற்றழுத்தத்தில் எளிஹில் அதே விகிதத்தில் நுரையீரலில் ஆக்ஸிஜன் புகாது. எனவே தலை சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற உடலியல் சிக்கல்கள் ஏறப்டும்.

இப் பிரச்சினைகளை சமாளிக்க உடல், கூடுதல் வேகத்தில் இதயத்தை துடிக்கச் செய்கிறது. ஆழ்ந்து மூச்சை இழுத்தும் ரத்த அழுத்தத்தை அதிகரித்தும் கூடுதல் ஆக்ஸிஜனைப் பெற முயற்சிக்கும். கூடுதல் நாட்கள் மலை உச்சியில் வாழ்ந்தால், நமது உடல் கூடுதல் ரத்தச் சிவப்பு அணுக்களை உருவாக்கி அதன் செறிவைக் கூட்டும். அதேபோல சிறு நுண் ரத்த நாளங்கள் புதிதாக வளரும். இவ்வாறு உடல் தகவலமைத்துக் கொண்டதும் மூச்சு இரைத்தல், இதயம் வேக வேகமாகத் துடித்தல்  போன்றவை நின்றுபோகும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>