உப்புத் தண்ணீரில் இயங்கும் இயந்திரம் உள்ளதா? உள்ளதெனில் அது எவ்வாறு வேலை செய்யும்?
உப்புத் தண்ணீரில் இயங்கும் இயந்திரம் உள்ளதா? உள்ளதெனில் அது எவ்வாறு வேலை செய்யும்?எரிபொருளைக் கொண்டுதான் எந்த இயந்திரமும் இயங்க முடியும். நீர் என்பது 1:2O இதில் உள்ள ஹைட்ரஜனைப் பிரித்துவிட்டால், அதனை எரிபொருளாகப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் கடல் நீரை வைத்து எப்படி ஹைட்ரஜனைத் தவிர்க்கலாம் என்றே ஆராய்ச்சி செய்கிறார்கள். ஜான் கன்சியுஸ் என்ற ஆராய்ச்சியாளர் கேன்சர் கட்டியின் உள்ளே புத்தப்பட்ட உலோகத் துகளை ரேடியோ அலைகள் மூலம் வெப்பமடையச் செய்தால், இதன் மூலம் கேன்சர் செல்களை அழிக்க முயன்றார்.
தற்செயலாக அவர் பயன்படுத்திய 13.56 மெகா ஹர்ட்ஸ் ரேடியோ அலை அருகில் வைக்கப்பட்டிருந்த உப்பு நீரில் தீப்பொறியை ஏற்படுத்தியது. ரேடியோ அலைகளை செலுத்தி உப்பு நீரைப் பிரிக்க முடியும் என அவர் கண்டார். ஆனால் ரேடியோ கதிர்கள் தயாரிக்கச் செலவு அதிகம். எனவே அந்த முறை சாத்தியமில்லை.
*************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments