Mar 082016
உதட்டுக்கு மேல் உள்ள ரோமத்தைப் போக்குதல்:
உதட்டுக்கு மேல் உள்ள ரோமத்தால் மன வேதனையா? அதே சமயம் நீங்கள் ‘த்ரெடிங்’ பண்ணவும் விரும்பவில்லையா? இதோ உங்களுக்காக வீட்டிலேயே செய்துகொள்ளும் சுலபமான சிகிச்சை முறைகள்:
- மஞ்சள் தூளையும் பாலையும் கலந்த பேஸ்டை மெதுவாக தடவி, அது காய்ந்ததும் கழுவி விடவும்.
- முட்டையின் வெள்ளைக் கருவையும், சோள மாவையும், சர்க்கரையையும் கலந்த பேஸ்டைத் தடவி 30 நிமிடம் கழித்து கழுவவும்.
- கொண்டக் கடலை மாவை, தண்ணீர், மற்றும் மஞ்சள் தூளுடன் கலந்து தடவலாம்.
- சர்க்கரை மற்றும் எலுமிச்சம் பழ ஜூஸ் கலந்து, மேல் உதட்டில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவி விடவும்.
- தயிர் மற்றும் கடலை மவு மற்றும் மஞ்சள் தூள் கலந்த பேஸ்ட் விரைவில் பலனளிக்கும்.
- பாதாம் எண்ணெயைச் சூடாக்கி மேல் உதட்டின் மீது தடவவும். இது தோலை மிருதுவாக்குவதோடு தோலுக்கு ஒரு புத்துணர்ச்சியையும் தரவல்லது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments