Jan 252012
உண்மையை சொல்கிறேன் …கவிதை
உண்மையை சொல்கிறேன் …
நான்
கவிதை எழுவதில்லை
அவள்
பெயரை எழுதி
பத்திரப்படுத்துவதை தவிர …
நான்
பொய் சொல்வதில்லை
அவள் மட்டும் தான்
உலக அழகி
என்பதை தவிர …
பொய் சொல்வதில்லை
அவள் மட்டும் தான்
உலக அழகி
என்பதை தவிர …
நான்
உணர்ச்சி வயப்படுவதில்லை
அவள் மூச்சுக்காற்று
மிக அருகாமையில்
எனை உரசும்
நேரங்கள் தவிர …
நான்
தூங்குவதில்லை
அவள்
கனவுகளில் வரும்
பொழுதுகள் தவிர …
நான்
கவலைப்படுவதில்லை
அவள்
என்னுடன் இல்லாத
நிமிடங்கள் தவிர …
நான்
தற்பெருமை கொள்வதில்லை
அவள்
என் கைகளை
கோர்த்து நடக்கும்
தருணங்கள் தவிர …
உண்மையை சொல்கிறேன் …
நான்
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர …!
உருப்படியாக
எதையும் செய்வதில்லை
அவளை
காதலிப்பது தவிர …!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments