/* ]]> */
Jul 072020
 

உண்மைகள் சில:

பழைய நினைவுகள்

  • எல்.எஸ்.டி. போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு கற்பனையான மாயக் காட்சிகள் தோன்றும். ஆனால் அவர்களின் பழைய நினைவுகள்  தோன்றுவதற்கு வாய்ப்பு குறைவு என்கிறார்கள் உளவியலாளர்கள். 1950களிலிருந்து போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால், பழைய நினைவுகள் தோன்றும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.இதற்கு அறிவியல் ஆதாரங்கள் ஏதுமில்லை. போதைப் பொருட்களை பயன்படுத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு ஹல்லுசினேஷன் பர்சிஸ்டிங் பர்செப்ஷன் டிஸார்டர் (HPPD) எனும் உளவியல் குறைபாடு ஏற்படுகின்றது. அமெரிக்க உளவியல் மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள டயக்னாஸ்டிக் அண்ட் ஸ்டேடிஸ்டிகல் மேனுவல் ஆஃப் மென்டல் டிஸார்டர் (Diagnostic and Stastical Manual of Mental Disorders) என்ற நூலில் இது பற்றிய தகவல் கூறப்பட்டுள்ளது.
  • 3D டிவியில் முப்பரிமாண தன்மையில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளி பரப்பும்போது மட்டும் அதற்கான கண்ணாடிகளை அணிய வேண்டும். அப்போதுதான் அந்த நிகழ்ச்சிகளை தெளிவாகவும் துல்லியமாகவும் பார்கக் முடியும். மற்றபடி சாதாரண இரு பரிமாண முறையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கண்ணாடிகளின் தேவையின்றி சாதாரணமாகவே பார்க்க முடியும், எனவே, 3D டிவியின் முன்பு எப்போதும்  கண்ணாடிகளை அணிந்தே உட்கார வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  • பழங்களை தினசரி எந்த நேரத்திலும் சாப்பிடலாம். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. பசிக்கும்போது அதனைச் சாப்பிட வேண்டும். மற்றபடி உணவருந்திவிட்டு, உடனே பழங்களைச் சாப்பிடுவது செரிமானப் பிரச்சினையை ஏற்படுத்தும், உணவருந்துவதற்கு முன்னர் பழங்களைச் சாப்பிட்டு உணவருந்தலாம்.

************************************

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>