/* ]]> */
Feb 242021
 

உண்மைகள் சில – பிரானா மீன்கள் மனிதர்களை 5 நிமிடத்தில் சாப்பிட்டுவிடும்.

PIRANH FISHES

  •  பிரானா மீன்களின் பற்களைப் பார்த்து பயத்தில் இப்படிக் கூறியிருப்பார்கள்.ஒரு மனிதரை 500க்கும் மேற்பட்ட பிரானா மீன்கள் விருந்தாக உண்டால், 5 நிமிடங்களுக்குள் சாப்பிட வாய்ப்புள்ளது. என்கிறார், உயிரியலாளர் ரேமண்ட் அமேசான். ஆற்றில் பயணம் செய்து உயிருடன் உள்ள பசுவை பிரானா மீன்கள் வேட்டையாடியதைக் குறிப்பிட்டுள்ளார்.2020ல் பிரேசிலில் போர்ச்சுகீசிய ஆய்வாளர்கள் செய்த ஆய்வில் பிரானா மீன்களின் வேட்டையாடுதலில் பிற மீன்களின் பங்கும் உள்ளது  தெரிய வந்துள்ளது பிரானா மீன்களின் துணிச்சலும் கூர்மையானா பற்களும் இறந்த வாசனையை அறியும் திறனும் அதைப் பற்றிய மூட நம்பிக்கையை உருவாக்கி வருகின்றன.
  • விண்ணில் கிடைக்கும் காஸ்மிக் கதிர்களை ஆற்றலாகப் பயன்படுத்த முடியுமா? – சூரியன் ,விண்மீன் வெடிப்பு. கோள்கள் மோதல் ஆகியவற்றால் உருவாகும் காஸ்மிக் கதிர்வீச்சு பூமியை அடைவதுண்டு. மணிக்கு 100 கிமீ வேகத்தில் பேஸ்பால் ஒன்றை இயக்கும் அளவுக்கு ஆற்றல் வேகம் கொண்ட அணுக்கள் அதில் குறைவு. 60 வாட்ஸ் பல்பை காஸ்மிக் கதிர்வீச்சு மூலம் எரிய வைக்கவே 12 சதுர கிமீ பரப்பில் விழும் கதிர்வீச்சு தேவை காஸ்மிக் கதிர்வீச்சைவிட சூரிய ஒளி மூலம் கிடைக்கும் ஆற்றல் அதிகம் எனவே, அதைப் பயன்படுத்தி ஆற்றலை உருவாக்கி சேமித்துப் பயன்படுத்தலாம் .
  • வீட்டிலுள்ள குப்பை பழுப்பு நிறத்தில் இருக்கும். என்பது சரியா?:  வீட்டில் இறந்த தோல் செல்கள் தலைமுடி, உடைகளின் நூல், விலங்குகளின் முடி, தூசி, சிகரெட் சாம்பல், நகம் ஆகியவையே அதிகம் இருக்கும். இவற்றை ஒன்று சேர்த்தால் பொதுவான நிறம் பழுப்பாகவே இருக்கும்.  எனவே பெரும்பான குப்பை இந்நிறத்தில் உள்ளன,  இவை காற்று மூலம் அசைவுற்று, அறையின் மூலையில் சேகரமாகியிருக்கும். சிகரெட் புகைப்பவர்கள் இருக்கும் அறை என்றால் பழுப்பு நிற தூசிகள் மேலும் அதிகமாக இருக்கும்.
  • கடலிலிருந்து உப்பு உருவாகிறதா? – பல்வேறு ஆறுகளின் அடித்தளத்தில் உள்ள பாறைகள் கரைந்து உப்பு உருவாகிறது. அனைத்து ஆறுகளும் இறுதியில் ஒன்றாகச் சேருமிடம் கடல் . எனவே அங்கு உப்பின் அளவு அதிகமாக உள்ளது பாடைகள் கரைந்து சோடியம் குளோரைடு எனும் அயனிகளாக மாறுகின்றன. இந்த இரண்டு வேதிப் பொருள்களின் கலப்புதான் உப்பு. இப்படி ஆறுகள் கலக்கும் முன்னர் கடலில் உப்பின் அளவு குறைவாகவே இருந்தது. இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் உப்பு உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றன. மத்திய தரைக் கடல், சாக்கடல் ,பெர்சிய வளைகுடா  ஆகியவற்றில் உப்பின் அடர்த்தி  அதிகம்.

************************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>