/* ]]> */
Dec 222011
 

சிவவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் வில்வத்திற்கு “சிவமூலி” என்ற மற்றொரு பெயரும் உண்டு.வில்வம் நம் இந்திய நாட்டிற்கே உரித்தான பழமை வாய்ந்த ஒரு பழ மரமாகும்.இது ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது.மருத்துவ குணமுள்ள பழ வகைகளில் வில்வப்பழம் மிக முக்கியமானது.ஆனால் இப்பழத்தின் சுவையும்,வழவழப்புத் தன்மையும் மற்ற பழங்களைப் போல் நேரடியாக உட்கொள்ள முடிவதில்லை என்பதால் ,அவை மிக குறைந்த அளவிலேயே உணவுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

பண்டைய காலம் முதல் வில்வத்திற்கு சித்த,ஆயுர் வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் உண்டு.இம்மரத்தின் வேர்,பட்டை,இலை,பூ,பிஞ்சு,பழம் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்ததாக உள்ளன.

வில்வப்பழத்திலிருந்துபெறப்படும்தைலம்,கண்ணெரிச்சல்,தலைவலியை போக்குவதுடன்,உடலுக்கு அழகும் உண்டாக்கும்.வில்வப் பழ பானம் குடல்புண்ணை ஆற வைப்பதற்கும்,குடலுக்கு வலிமைத் தருவதற்கும் பயன்படுகின்றது.

இப்பழத்தில் 61.5 நீர்ச்சத்தும்,1.8 புரதமும்,1.7 தாது உப்புக்கள்,32மாவுப்பொருட்கள்,55 மி.கி ரிபோபிளேவின் B-2,8 மி.கி உயிர்ச்சத்து C  அடங்கியுள்ளன.வேறு எந்த பழங்களிலும் இல்லாத அளவிற்கு உயிர்ச்சத்து B அதிகமாக உள்ளது.

இப்பழத்தின் சுவையை கருத்தில் கொள்ளாமல்,மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டு “உணவே மருந்து” “மருந்தே உணவு” என்ற அடிப்படையில்,எல்லா வயதினரும் இப்பழத்தை பயன்படுத்தினால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

நன்றி:வளரும் வேளாண்மை

தொகுப்பு :diet-b

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>