தித்திக்கும் கரும்பு தெருவெங்கும் விற்பனைக்கு கொட்டிக் கிடக்கிறது.நா ஊற வைக்கும் கரும்பையும்,கரும்புச்சாறையும் இப்பருவத்தில் சுவைத்து அதன் முழு பயனையும் அடைய வேண்டும்.சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிப் பருகும் கரும்புச்சாறு சக்தி நிறைந்த[Energy drink], ஒரு சிறந்த ஆரோக்கியமான,ஊட்டச்சத்து நிரம்பிய பானம்,[Health drink].கரும்புச்சாறு எந்தளவுக்கு சக்தி கொடுக்கிறதோ அந்தளவுக்கு கலோரியையும் கொடுக்கும் என நினைப்பது தவறு.100 மிலி கரும்புச்சாறிலிருந்து 36 கலோரி தான் கிடைக்கிறது.இது பிற குளிர்பானங்கள்,மற்றும் பழச்சாறிலிருந்து கிடைக்கும் கலோரிகளைவிட குறைவு தான்.இது ஒரு லோ கலோரி பானம்[low calorie drink].அதனால் இதனை யார் வேண்டுமானாலும் பயமில்லாமல் பருகலாம்.சக்க்கரை நோயாளிகள் கூட எவ்வித டென்சனும் இல்லாமல் பருகலாம்.ஏனெனில் இதில் உள்ள சர்க்கரையின் வடிவமைப்பு சாதாரணமானது.[Type of sugar present in sugarcane is of simple structure].கரும்புச்சாறின் மருத்துவ குணங்களை இப்பொழுது பார்ப்போம்.
மருத்துவ குணங்கள்:
*கரும்புச்சாறில் நம் உடம்பிற்கு தேவையான பலவிதமான vitamins,minerals அதிகளவில் இருக்கிறது.
*பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.[dental health].
*சிறுநீரகத்தின் சீரிய பயன்பாட்டுக்கு நல்லது.[beneficial for the functioning of the kidneys].
*செரிமான சக்தியை தூண்டக்கூடியது.
*உடம்பில் தண்ணீர் சத்தை தக்கவைக்கிறது[prevents dehydration].
*இருமல்,ஜலதோஷத்திற்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
*இதில் இருக்கும் காரத்தன்மை[basicity]மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்[antioxidants] மார்பக புற்று நோய்[breast cancer],prostrate cancer-ரை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
*மஞ்சல்காமாலையின் பொழுது கரும்புச்சாறு பருகினால் ஈரலுக்கு நல்லது.[strengthens liver during jaundice].
*கரும்புச்சாறுடன் சிறிது இஞ்சிச்சாறு,தேங்காய்த்தண்ணீர் கலந்து பருகினால் வயிற்றெரிச்சலுக்கு [acidity related problems] சிறந்த மருந்து.
கரும்புச்சாறின் பயன்களை பார்த்துவிட்டோம் .இனி பயனடைய வேண்டியது உங்கள் கையில்…
குறிப்பு:
கரும்புச்சாறை தயாரித்தவுடன் பருகிவிட வேண்டும்.இல்லையேல் நிறம் மாறி அதில் உள்ள சத்துக்கள் வீணாகி மேற்கொண்டு கெடுதலை உண்டு பண்ணிவிடும்.
கரும்புச்சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு,இஞ்சிச்சாறு,புதினா சேர்த்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.
தொகுப்பு & தமிழாக்கம் : diet-b
நன்றி:வேளாண்மை செய்திக்கதிர்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments