/* ]]> */
Aug 202018
 

உணவுப் பண்டங்கள், இறந்த உயிரிகளை நோக்கி எறும்புகள் வரக் காரணம் என்ன?

ants

எறும்பு போன்ற பூச்சிகளில் அதிர்வு உணர்வி, ஒளி உணர்வி, வேதி வாசனை உணர்வி என மூன்று உணரும் அமைப்புகள் இருக்கின்றன.  எல்லாப் பூச்சிகளுக்கும் வாசனை உணர்வு மிக அதிகமாகவே இருக்கும். உணவுப் பண்டங்கள்,  இறந்த உயிரிகள் வெளிப்படுத்தும் வேதி வாசனைகள் போன்றவற்றை முகர்ந்தே அதனை நோக்கிப் பூச்சிகள் வருகின்றன.

மற்ற பூச்சிகளுடன் ஒப்பிடும்போது வேதி வாசனையை உணரும் திறன் எறும்புக்கு மிக அதிகம். அதிக பட்சம் 400 வேதி வாசனைகளை உணரும்படியான வாசனை உணர்விகள் எறும்பின் மரபணுவில் உள்ளன. அதன்படி, ஈக்களுக்கு 61, கொசுக்களுக்கு 74 முதல் 159, தேனீக்களுக்கு 174 வகை உணர்விகள் உள்ளன. வாசனையை வைத்து மட்டுமே எறும்பால் உணர முடியும் என்பதால், உணவுப் பொருட்களை காற்றுப் புகாமல் மூடி வைத்தாலே எறும்பு வருவதைத் தவிர்க்கலாம்.

^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>