/* ]]> */
Feb 142020
 

உடல் இயக்கமும் நோயற்ற வாழ்வும்:

FUNCTIONING OF OUR BODY AND HEALTHY LIFE

நமது உடல் ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித் தனியே  கடகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் முடிந்தவுடன் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றிவிடுகிறது. மனித உடலில் உள்ள உறுப்புகளின் வேலைப்பாடுகளைப் பார்ப்போம்.

  • அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரல்:

இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகக் சேகரித்தால், ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாள்:இகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

  • காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடல்:

காலைக் கடன்களை இந்த நேரத்தில் முடித்தே தீரவேண்டும். மலச் சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், நாளடைவில் மலச் சிக்கல் தீரும்.  உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே..

  • காலை 7 மனி முதல் 9 மணி வரை வயிறு:

.இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று ஹிகசொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

  • 9 மணி முதல் 11 மணி வரை மண்ணீரல்:

காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும், ரத்தமாகவும் மாற்றுகின்ற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரிழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரமிது.

  • பகல் 11 மணி முதல் 1 மணி வரை இதயம்:

இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல்,  கோபப்படுதல் அதியகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிக மிக எச்சரிக்ககியாக இருக்கவேண்டிய நேரம். இது.

  • பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை சிறுகுடல்:

இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

  • பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை சிறுநீர்ப்பை:

நீர்க் கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

  • மாலை 5 மணி முதல் 7 மணி வரை சிறுநீரகம்:

பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க தியானம் செய்ய வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

  • இரவு 7 மணி முதல் 9 மனி வரை பெரிகார்டியம்:

இது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இதயத்தின்  shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம்.

  • இரவு 9 மணி முதல் 11 மணி வரை டிரிப்பில் சீட்டர்:

இது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை, இந்த நேரத்தில் உறங்கச் செவது நல்லது.

  • இரவு 11 மணி முதல் 1 மணி வரை பித்தப்பை:

இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால், பித்தப்பை இயக்கக் குறைபாடு ஏற்படும்.

  • நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரல்:

இந்த நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ விழித்திருக்கவோ  கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும்.  உடல் முழுவதும்  ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.

இந்தப் பணியை நீங்கள் மறுநாள்  முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

இதுதான் நமது உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகள். இதையறிந்து இதற்கு ஏற்றாற்போல் தங்களது நடைமுறை வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், நோயின்றி வாழலாம்.

நோயற்ற வாழ்வே  வாழ்வே குறைவற்ற செல்வம்.

***********************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>