/* ]]> */
Sep 062016
 

உடலுக்குத் தேவையான வைட்டமின்-டி யை எப்படி பெறுவது?

நம்முடைய நாடு உஷ்ணமான வானிலை கொண்ட நாடு. ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் வெயில் இருக்கிறது. அப்படியும் ‘வைட்டமின் குறைபாடு’ அதிகரித்திருப்பது வருத்தமான விஷயம்.இடஹ்ற்குக் காரணம் 20 ஆண்டுகளாக நம் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியதே.

குறிப்பாக ஐ.டி. துறையில் இருப்பவர்கள் சூரியன் உதிப்பதற்கு முன் அலுவலகம் சென்று, சூரியன் மறைந்த பிறகே வெளியில் வருகின்றனர். சூரிய வெளிச்சம் என்பதே அவர்கள் மீது படுவதில்லை.

அடுத்தது பள்ளி செல்லும் குழந்தைகளின் நேரம் மாறிவிட்டது. காலை 7.00 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, மாலை 4 மணிக்கு பள்ளியை விட்டு வெளியே வருகின்றனர். சூரிய வெளிச்சம் என்பதே அவர்கள் மீது படுவதில்லை. பி.டி. வகுப்புகள் பெரும்பாலும் கிடையாது. பல பள்ளிகள்:இல் மைதானங்களே கிடையாது. முற்றிலும் ஏ.சி. செய்யப்பட்ட பள்ளிகளும் அதிகரித்து வருகின்றன.

வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறி, ஜன்னல்களைக்கூட திறப்பதில்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் சூரிய ஒளி எங்கிருந்து நம்மீது படும்?காலை 10 மணி முதல், மாலை 3.00 மணி வரை, நம்மீது படும், அன்றாடம் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்-டியை நம் உடல் உறப்த்தி செய்து கொள்கிறது. இன்டஹ்க் குறிப்பிட்ட நேரத்தில், வாரத்தில் 3 நாட்கள் 15 நிமிடங்கள் சூரிய ஒளி நம்மீது படும்படியாக இருந்தாலே போதும். இந்தப் பிரச்சினை வராது.

உடலுக்குத் தேவையான வைட்டமின்-டி சத்தை உணவு மூலமாக பெற முடியுமா என்றால், மிகக் குறைந்த அளவே சாத்தியம். அதிலும் பால், முட்டை, மீன் இவற்றில் மட்டுமே உள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகள் மேலும் வெயில் படுவதில்லை.

நாட்டுக்கோழி முட்டையில் வைட்டமின்-டி சத்து உள்ளது. ஆனால் தற்போது நாட்டுக்கோழியே கிடையாது. சாமன் உட்பட சிலவகை மீன்களில் மட்டுமே வைட்டமின்-டி உண்டு.

காலை 10 மணிக்கு மேல் வெளியில் செல்பவர்களும், சன்ஸ்க்ரீன் உட்பட பல லோஷன்களைத் தடவிக் கொள்கின்றனர். இது நேரடியாக சூரிய ஒளி, நம் தோல் மீது படும்போது, உற்பத்தியாகும் வைட்டமின்-டி மட்டுமே ஆரோக்கியமானது. அப்படி இல்லாத படசத்தில், மேலை நாடுகளைப் போல, உணவுப் பொருட்களில், வைட்டமின்-டி சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

உங்கள் குழந்தைகள் வெளியில் போய் விளையாடும் குழந்தைகளாக இருக்கலாம். ஆனால், வெளிச்சம் உடல் மீது படும்படியாக விளையாடுகின்றனரா என்று கவனித்து வரவேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>