/* ]]> */
Feb 102021
 

உங்களுக்கு தெரியுமா?- சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்துவது கைகளை கழுவுவதைவிட சிறப்பானது

CLEANING OF HANDS BY SANITIZER

  • சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்துவது கைகளை கழுவுவதைவிட சிறப்பானது. சானிடைசர்களில் 60% ஆல்கஹால் உள்ளது, எனவே அது கைகளிலுள்ள நுண்ணுயிர்களை அழிக்கும் இச் செயல் சரியாக நடைபெற கைகளியல் தூசி, அழுக்கு இருக்கக்கூடாது, இதன் மூலம் கைகளிலிருந்து கண்கள், மூக்கு, முகம் ஆகியவற்றில் நுண்ணுயிர்கள் பரவாமல் தடுக்க முடியும். அனைத்து இடங்களிலும் கைகளைக் கழுவுவதைவிட சானிடைசரை நடைமுறையில் பயன்படுத்துவது எளிது.
  • உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.:- உடற்பயிற்சி செய்வது நோய் கிருமிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு எப்போதும் துணை நிற்கும். காலையில் எழுந்து  உடற் பயிற்சி அல்லது யோகா செய்வது உடல் செல்களை ஊக்கப்படுத்தி நோய் எதிர்ப்பைக் கூட்டும் குறிப்பிட்ட தூரம் நடப்பது, ஓடுவது, நீச்சல்,ஆகியவற்றை தினசரி செய்வது நல்லது. தினசரி உடலை அசைத்து உடற்பயிற்சிகளை செய்வது நோய் எதிர்ப்பு சக்தியைக் கூர்மையாக்கும்
  • கைகளைத் தண்ணீரில் கழுவுவதன் மூலம் வைரஸ்கள அழிக்கலாம்.  :- அவற்றை இம்முறையில் அழிக்க முடியாது. நீரோடு சோப்பும் தேய்த்து கைகளைக் கழுவும்போது கிருமிகஈ கைகளிலிருந்து அகற்றப்பட்டு நீரோடு செல்கிறது நன்கு சோப்பு போட்டு கைகளைக் கழுவிய பிறகு கைகளை ஈரம் காயும்படி துவாலையால் துடைத்துக்கொள்வது அவசியம்  அப்போதுதான் கிருமிகள் ஈரமில்லாத வறண்ட கைகளில் தொற்ற முடியாது.
  • தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனாவைக் கண்டுபிடிக்க முடியாது:- கொரோனா கொள்ளை நோய் ஏற்பட்டால், பலருக்கும் ஏற்படும் முதல் அறிகுறி காய்ச்சல், எனவே தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சலை அடையாளம் கண்டால், அவர்களைத் தனிமைப்படுத்தி பின்னர் வேறு நோய்த் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டுள்ளனவா என மருத்துவர்கள் சோதிப்பர். சாதாரண காய்ச்சல்தானே என்று சும்மா இருக்கவே கூடாது. மலேரியா அல்லது டெங்கு பாதிப்பாகக் கூட இருக்கலாம்.
  • 5ஜி தொலை தொடர்பு இணைப்புகள் மூலம் நோய்த் தொற்று பரவுகிறது. :- வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்ட எந்த நுண்ணூயிரியும்  ரேடியோ அலைகள் அல்லது தொலை தொடர்பு இணைப்புகள் மூலம் பரவுவதில்லை பல்வேறு நாடுகளில் கொரோனா வேகமாகப் பரவுவதற்கு காரணம். நுண்ணுயிர்த் தொற்றுக்கு உள்ளானவர் தும்மியும் இருமியும் காற்றில் நீர்த் திவலைகள் பரப்பியதால்தான்.

*******************************************

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>