/* ]]> */
Aug 022020
 

உங்களுக்குத் தெரியுமா?

  • LANDS REQUIRED FOR
  • உலகிற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்ய அதிக நிலம் தேவையா?: இல்லை; குறைவான நிலப் பரப்பில் இருந்துதான் விவசாயிகள் கூடுதல் உணவுப் பயிர்களை அறுவடை செய்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் அந்த நாட்டின் மக்கள் தொகையில் 1.3 சதவீதம்தான். அதாவது வெறும் 26 லட்சம் பேர்கள்தான். நிலப் பரப்பு பெரியதோ சிறியதோ எப்படி லாபகரமாக விவசாயம் செய்கிறார்கள் என்பதே முக்கியம். இந்த வகையில் சிறிய நிலப் பரப்பைக் கொண்டுள்ள விவசாயிகள் தங்களுக்கான உணவுப் பொருட்களைப் பெறுவதோடு மீதியை சந்தையில் விற்கிறார்கள். உணவுப் பொருள்களுக்காக அதிக நிலம் தேவை என்பது தவறான நம்பிக்கை.
  • தலையில் உள்ள வெள்ளை முடி ஒன்றைப் பிடுங்கினால், நிறைய வெள்ளை முடிகள் தோன்றும் என்பது சரியா?: தலைமுடியின் வேர் ஒன்றில் ஒரு முடிதான் வளரும்.அதில் வளர்ந்துள்ள வெள்ளை முடியைப் பிடுங்கினால், திரும்பவும் அதில் வெள்ளை முடிதான் தோன்றும். முடியைப் பிடுங்கியதால் உடனே உங்களைப் பழிவாங்க நிறைய முடிகள் முளைக்காது. முடிந்தவரை தலைமுடியைப் பிடுங்காமல் கத்தரித்துவிடுங்கள். அடிக்கடி தலைமுடியைப் பிடித்து இழுத்துப் பிடுங்கினால், அதில் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
  • மூக்கில் நுழைந்த அந்நியப் பொருளை உடல் வெளியேற்ற  முனையும் வெளிப்பாடுதான் தும்மல். ஒருமுறை தும்மினால், நமது மூக்கிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் காற்றில் பரவுகின்றன. தும்மலை அடக்கினால், கண்கள், மூளையிலுள்ள ரத்த நாளங்கள் , காதிலுள்ள ஜவ்வு அமைப்பு  பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, தும்மல் வந்தால்  கைக்குட்டையால், மூக்கை[ப் பொத்தியபடி தும்மிவிடுங்கள். இதனால் பிறருக்கும் பாதுகாப்பு கிடைக்கும். உங்கள் உறுப்புகளும் சேதமுறாது.

*********************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>