/* ]]> */
Jan 272021
 

உங்களுக்குத் தெரியுமா?- வைரங்களை அத்ன்  நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்.

diamonds

  • வைரங்களை அதன் நிறத்தைப் பொறுத்து தீர்மானிக்கலாம் என்பது சரியா?- பூமிக்கு அடியில் கடுமையான வெப்பம் மற்றும் அழுத்தத்தினால், உருவாகும் தூய கார்பன் வடிவமே வைரம். பல்வேறு பொருட்களிலும் கார்பன் மூலக்கூறு உண்டு. நமது உடலின் எடையில் கூட 18 சதவீதம் உள்ளது. அறுக்கப்படும் அளவு, வைரத்தில் உள்ள பிழைகள் எடை, நிறம் ஆகியவை வைரத்தின் மதிப்பை அளவிடும் அளவுகோல்களாக உள்ளன.  வைர உற்பத்தியாளர்கள் வண்ணங்களுக்கு ஓர் அளவீடு வைத்துள்ளனர்  அதில் வண்ணம் அற்ற வைரமே மிக மிக அரிதானது. அதனால், அதன் விலையும் அதிகம் .
  • தூங்கி எழுபவர்களுக்கு ஏற்படும் தசைப் பிடிப்பிற்கு சத்துக் குறைபாடு காரணமா?-  தூங்கி எழும் பலருக்கும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். வைட்டமின்-சி , மாவுச் சத்துக் குறைபாடு, குறைந்த அளவு நீர் குடிப்பது, அதிக அளவு காபி, டீ குடிப்பது ஆகியவற்றின் காரணமாக தசைப் பிடிப்பு ஏற்படும். கால் தசைகளை மெல்ல மஸாஜ் செய்து விட்டால்,  தசைப் பிடிப்பை சமாளித்து விடலாம் . ஆனால் இப் பிரச்சினை தொடர்ந்தால்,   ரெஸ்ட்லெஸ் சிண்ட்ரோம்(Restless  llegs syndrome ) எனும் நரம்பு ரீதியிலான நோயாக இருக்கலாம். எனவே அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவர் சிகிச்சையைப் பெறுவது அவசியம்.
  • ஒருவரது இறப்பைக் கண்டறிய உடற்கூராய்வு முக்கியமான சோதனை என்பது சரியா?- ஒருவரது மரணம், கொலை , விபத்து, தற்கொலை சந்தேகத்துக்குரியதாக நடந்திருப்பதாகக் கூறினால், அவரது உடலைக் கூராய்வுக்கு அனுமதிப்பார்கள் இதனை மருத்துவ ஆய்வாளர் அல்லது தடயவியல் தோலியல் நிபுணர் செய்வார்.  உடல் உறுப்புகளை முழுமையாக சோதனை செய்யஆறு மணி நேரம் தேவை. இச் சோதனையில் ஒருவர் எப்படி என்ன காரணத்தால் இறந்தார் என்பதைக் கண்டறிய முடியும் சோதனை செய்த பிறகு உடல் உறுப்புகளை மருத்துவர் அதே இடத்தில் வைத்து தைத்து விடுவார். 1963ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அதிபர் கென்னடியின் உடல் பிணக்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டது இன்றளவும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அவரது உடலைப் பரிசோதித்தவர் சான்றிதழ் பெற்ற தடயவியல் தோலியல் நிபுணர் அல்ல என்பதுதான் சர்ச்சை.
  •  கதிர்வீச்சுக்கு உள்ளானவரகளுக்கு ஐயோடின் மாத்திரைகள் பலனளிக்குமா?-  கதிவீச்சுக்கு உள்ளானவர்களுக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்படுவதை ஐயோடின் மாத்திரைகள் (Potassium Iyodide) குறைக்கும். ஆனால் பிற உறுப்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது. தைராய்டு என்பது தொண்டையில் உள்ள பட்டாம்பூச்சி வடிவிலான உறுப்பு. உடலின் வளர்சிதை மாற்றம். மூளையின் செயல்பாடுகள். உடல் வெப்பநிலை, வளர்ச்சி, ஆகியவற்றை சீராக்குகிறது. ஐயோடின் மாத்திரைகளின் பக்க விளைவாக உமிழ்நீர் சுரப்பி பாதிப்பு, ஒவ்வாமை, வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். ஒருவரது உடலில் ஐயோடின் குறைந்திருக்கும்போது, கதிர்வீச்சு பாதிப்புக்கு உட்பட்டால், அவருக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்படும். எனவே புற்றுநோயைத் தடுக்க மாத்திரைகளை உடனே சாப்பிடுவது அவசியம்.

************************************ .

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>