Jan 012021
உங்களுக்குத் தெரியுமா?- யோகா பயிற்சி அனைத்து உடல் வலிகளுக்கும் நிவாரணம் தருமா?
- யோகப் பயிற்சிகள் அடிப்படையில் மனதுக்கான பயிற்சி. உடலின் இயக்கத்தைப் பற்றி மனம் புரிந்துகொள்வதற்கான பயிற்சி. அதை வெறும் உடல் வலிகளுக்கானது என்றோ கட்டுடல் வளர்ப்பதற்கானது என்றோ சுருக்கிப் பார்ப்பது தப்பு. உடல் நலம் மேம்படுவது ஒரு துணை நிகழ்வு. இயற்கையின் படைப்பில் உடல் எவ்வளவு அற்புதமானது என்பதைப் புரிந்துகொள்வதற்கே யோகா அவசியம்.
- இயங்கிக் கொப்ண்டிருக்கும் இதயம் நின்றுபோனால், மின் அதிர்ச்சி மூலம் இயங்க வைக்கலாமா?- இயங்கிக் ஒண்டிருக்கும் இதயம் திடீரென்று நின்று போனால், அவர்களுக்கு உடனே டிஃபைபிரிலேட்டர் ( Defibrillator) மூலம் மின் அதிர்ச்சியைக் கொடுப்பார்கள். ஆனால், இதயத்தின் லப்டப் சத்தம் குறைந்து அதில் குறைந்த அளவு மின்சார இயக்கம் இருந்தால் மட்டுமே, இக்கருவி அதனைச் சீராக்கும். உடல் முற்றிலும் இதயத்தைத் துடிக்க வைக்கும் திறனை இழந்திருந்தால், இக்கருவியைப் பயன்படுத்தினாலும் பயன் கிடைக்காது.
- ஆல்கஹால் மூளை செல்களுக்குப் பாதுகாப்பானதா?- மதுவைக் குடித்தவுடன் கல்லீரல் அதனைப் பல்வேறு பகுதிப் பொருளாகப் பிரிக்கிறது. ஆனால், அதிகளவு மது அருந்தும்போது கல்லீரல் அதனைப் பிரிக்க முடியாமல் தடுமாறும். இதனால், மது நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து மூளையை அடையும். இதன் காரணமாக தலை சுற்றல், பேச்சு உளறல், கால்கள் தள்ளாடுவது ஆகியவை நடக்கின்றன, மேற்சொன்ன அறிகுறிகள் தற்காலிகமானவை. குறைவோ, நிறைவோ மது அருந்துவது மூளைக்கு மட்டுமல்ல உடல் உறுப்புகளுக்கும் ஆபத்தானது
********************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments