/* ]]> */
Sep 172020
 

உங்களுக்குத் தெரியுமா?- மழைக் காலங்களில் சோலார் பேனல்கள் வேலை செய்யாது என்பது உண்மையா? –

SOLAR PANELS

  •  சோலார் பேனல்கள் வேலை செய்யாது என்பதில் உண்மையில்லை. – வானில் சூரியன் இருந்தால் போதும் அதன் ஆற்றலின் மூலம் சோலார் பேனல் மின்சாரத்தைத் தயாரிக்கும். மற்றபடி குறிப்பியோட்ட காலத்தில் மின்சாரத்தை தயாரிக்காது என்பது பொய். மேகமூட்டமான நாட்களிலும் சோலார் பேனல்கள், சீரிய ஆற்றலை உட்கிரகிக்கும் தன்மை கொண்டவை. வெப்ப ஆற்றல் குறைவாக இருந்தாலும் ஆற்றலை சேமிக்கும். ஆனால், இதனை நன்றாக வெயில் காயும் நாட்களின் ஆற்றல் சேமிப்பொடு ஒப்பிட முடியாது.சோலார் பேனல்களை தினசரி தூசுகளின்றி, நன்றாக சுத்தம் செய்வது முக்கியம். மற்றபடி இதில் ஏதாவது பிரச்சினை என்றால், சோலார் பேனல் நிறுவத்தினரை அணுகலாம்.
  • சோலார் பேனல் வழி உருவாகும் மின்சாரத்தை வீட்டில் மின் கட்டணம் குறைந்துவிடும் என்பது உண்மையா?-  நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் பல்வேறு மின் சாதனங்களைப் பொறுத்தே இதனைக் கூற முடியும். சோலார் பேனல்கள் மூலம் பெறும் வெப்ப ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றி, பேட்டரி மூலம் சேமித்தால், பேட்டரி மூலம் சேமித்தால், மின்சாரக் கட்டணம் குறையும். சூரிய ஆற்றல் மின்சாரத்தையும் சாதாரண மின்ராரத்தையும் மாற்றி மாற்றி பயன்படுத்தும்போது , மின் கட்டணம் குறைவாக வர வாய்ப்புள்ளது.
  • காய்கறிகள், பழங்களில் செயற்கையாக நிறமிகளை சேர்க்க முடியும்.என்பது உண்மையா?- மரபணு மாற்ற தொழில்நுட்பம் வரும் காலத்தில் இதனை முயற்சி செய்யலாம். ஆனால், மரம் செடிகளிலிருந்து காய்கறிகள் பழங்களைப் பறித்த பிறகு அதில் ஊசி மூலம் நிறமிகளைச் சேர்க்க முடியாது. அப்படிச் செய்தால் பழம் விரைவில் கெட்டு விடும் அப்படிச் செலுத்தினாலும், நிறமிகள் பழம் முழுக்க சீராகப் பரவுவதற்கு வாய்ப்பு குறைவு. மேலும் இந்த நிறமிகள் என்ன விதமான வேதிப் பொருளைக் கொண்டிருக்குமோ, அது பழத்தின் தன்மையை எப்படி மாற்றுமோ என்றெல்லாம் சந்தேகம் உண்டு. இயற்கை நிறங்களே அழகு.

*********************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>