/* ]]> */
Oct 202020
 

உங்களுக்குத் தெரியுமா?- நாய்கள் எச்சில் வழியே வியர்வையை வெளியேற்றும் என்பது உண்மையா?

நாய்கள் யைத் திறந்து மூடும்

* நாய்கள் எச்சில் வழியே வியர்வையை வெளியேற்றும் என்பது உண்மையா?- நாய்களுக்கு வியர்வை அதன் பாதங்கள் வழியே வெளியேறும். அவை அடிக்கடி வாயைத் திறந்து மூடுவது உடலின் வெப்பத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகத்தான்.

* இரு கைவிரல் நகங்களும் ஒரே அளவில் வளரும்:- நமது கைகளில் உள்ள விரல் நகங்கள் வேகமாக வளர்வது என்பது அதில் பாயும் ரத்தத்தின் அளவைப் பொறுத்தது.  பொதுவாக நீங்கள் எந்தக் கையை அதிகம் பயன்படுத்துகிறீர்களோ, அதில் நகங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

*  ஒருவரது ஐ.க்யூ என்பது அவர் பிறக்கும்போது தீர்மானிக்கப்படுகிறது. – ஐ.க்யூ. என்பது ஒருவர் கற்றுப் புரிந்துகொள்ளும் விஷயங்களின் முடிவு எனலாம். இது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக்கூடியது. நிலையானது அல்ல. ஐ.க்யூ சோதனையை ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லூயிஸ் டெர்மன் மேம்படுத்தினார். ஐ.க்யூ புள்ளிகள் என்பது ஒருவரது செயல்திறனை தீர்மானிப்பதல்ல. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நாடுகளில் ஐ.க்யூ புள்ளிகள் 10 ஆண்டுகளுக்கு 3 புள்ளிகள் உயர்கின்றன என வரையறுக்கப்படுகிறது. ஃபிளைன் எஃபக்ட் (Flynn Effect) கோட்பாடு. இது பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதல்ல.

* உரங்களிலுள்ள கனிமச் சத்துக்கள் நிலத்தை பாழ்படுத்துகின்றன:- நிலத்திலுள்ள சத்துக்களை முதலில் ஆராய்ந்த பிறகு, அதில் என்ன சத்துகள் இல்லையோ அதற்கேற்ற உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.  இதில் இயற்கை உரங்கள் அல்லது கனிமச் சத்துக்களைக் கொண்ட மனிதர்கள் உருவாக்கும் யூரியா போன்ற செயற்கை உரங்களும் உள்ளடங்கும். நிலத்தில் குறிப்பிட்ட சத்துகள் அதிகரிக்கும்போது மண்ணின் திறன் பாதிக்கப்பட்டு, விளைபொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது..

* இயற்கை உரங்களே தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவும்.மனிதர்கள் உருவாக்கும் செயற்கை உரங்கள் அனைத்துமே பயிர்களுக்கு எடை கூடிவர உதவுகின்றன. இயறகியான உரங்களில் கார்பன் உள்ளது. செயறகி உரங்களில் கார்பன் கிடையாது. இயற்கையான உரங்களில் 13% நைட்ரஜன் மட்டுமே உள்ளது, அதுவே கனிமச் சத்துகள் நிரம்பிய செயற்கை உரங்களில் 46% நைட்ரஜன் மண்ணுடைய சத்துக்களை சோதித்துவிட்டு ம் அதற்கேற்ப, இயற்கை செயற்கை என இரண்டு உரங்களையும் கூட்டாகப் பயன்படுத்தலாம். மண் ஊட்டச் சத்துகள் நிரம்பியது என்றால், இயறகி உரங்க:ளே போதுமானது.

*****************************

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>