Dec 142020
உங்களுக்குத் தெரியுமா?- நாயின் வால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவா?
- வீகன் உணவு முறையே சிறந்தது என்பது சரியா?:- இதய நோய் பாதிப்பைக் குறைக்கும் என்று கூறப்பட்டாலும், வீகன் உணவு முறை ஆயுளை அதிகரிக்கும் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை. இங்கிலாந்தில் இறந்துபோன 5200 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் வீகன் உணவு முறையாளர்கள் , பிற உணவு முறையாளர்கள் ஆகிய இருவருக்கும் ஆயுளில் அதிக வேறுபாடுகள் இல்லை என்பது தெரிய வந்தது. வீகன் முறையில் , பருப்பு, தானியங்கள் அதிகம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு வைட்டமின் பி12, இரும்புச் சத்து ஆகியவை போதுமான அளவு கிடைப்பதில்லை. தாவரங்களை அதிகம் பயன்படுத்துவதால், நார்ச் சத்து கிடைக்கும். நீங்கள் செய்யும் வேலையைப் பொறுத்து உணவு முறையைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு.
- கிளி மட்டுமே நாம் சொன்னதை திருப்பிச் சொல்லும். என்பது சரியா?- கிளி, காகம் , மைனா ஆகிய பறவைகளும் குறிப்பிட்ட ஒலியை அப்படியே நகல் செய்து திருப்பிச் சொல்லும். கிளி தொண்டையிலுள்ள தசைகளை குறிப்பிட்ட அளவில் அசைத்து ஒலியை எழுப்பும். அழுத்தமான பெரிய தொண்டை இதற்கு உதவுகிறது. மைனா எழுப்பும் குரலைவிட மெதுவாகக் குரல் எழுப்புவதால், மனிதர்களின் குரல் நேர்த்திக்கு அருகில் கிளியின் பேச்சும் வருகிறது. பேசும் வார்த்தையின் பொருளை கிளி அறியாது. அது குரலை அப்படியே நகல் செய்து பேசும்.
- நாயின் வால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவே என்பது சரியா?- நாயின் வால் என்பது தகவல் தொடர்புக்கானது. மருத்துவர் ஸ்டான்லி சோரன் ‘ நாய் தனது வாலை உடலின் பேலன்ஸிற்காகப் பயன்படுத்துகிறது. என்று குறிப்பிடுகிறார். நாய்க்குட்டி பிறந்த சில நாட்களில் சாப்பிடுவதும் தூங்குவதுமாக இருக்கும். ஏழு வாரங்களுக்குப் பிறகு தகவல் தொடர்பு கொள்ள ( நடப்பது, ஓடுவது, விளையாடுவது குரைப்பது) தொடங்கும். உயிரினங்களிடம் செல்லும்போது மட்டுமேனாய் வாலை தகவல் தொடர்புக்காகப் பயன்ப்ப்டுத்தும்.
- உள்ளூர் காய்கறிகளைச் சாப்பிடுவதே சிறப்பானது என்பது சரியா?- உலகின் அனைத்து நாடுகளிலும் இயற்கைச் சூழல் சிறப்பாக இருப்பதில்லை. உள்ளூர் காய்கறிகளைச் சாப்பிடுவது பொருதாரம் சார்ந்து சரியான முடிவு, அனைத்து காய்கறிகளையும் அவரவர் வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்துவது இயலாத காரியம். நியூஸிலாந்திலிருந்து செம்மறி ஆட்டிறைச்சியை இங்கிலாந்து இறக்குமதி செய்கிறது. அந்நாட்டின் சூழலுக்கு ஏற்ப புனல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு பண்ணைகள் பராமரிக்கப்படுகின்றன. அதனை இங்கிலாந்தில் சாத்தியப்படுத்துவது இயலாது. ஸ்பெயின் நாட்டில் வளரும் செழிப்பான தக்காளியின் தரத்துடன் இங்கிலாந்து [ப்ஓட்டியிட முடியாது. எப்போதுமே உள்ளூர் காய்கறிகளே சிறப்பானவை என்று கூறிவிட முடியாது. பருவ காலத்தில் விளையும் காய்கறிகள், குறைந்த அளவு பதப்படுத்துதல் என பிற இடங்களில் விளைவனவற்றையும் கவனித்து வாங்கலாம்.
******************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments