/* ]]> */
Nov 192020
 

உங்களுக்குத் தெரியுமா?- தலைக்கு மஸாஜ் செய்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது சரியா?

MASSAGING THE HEAD PREVENTS BALDNESS

 

  • தலைக்கு மஸாஜ் செய்தால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது சரியா?- தலைக்கு மஸாஜ் செய்வது வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. வழுக்கை ஏற்படுவதற்கு நாம் வாழும் சூழல், உணவு , மரபணு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும். இதுபற்றிய ஆய்வுகள் குறைவு. தலையில் உள்ள ரத்த நாளங்களை 5 நிமிடங்களுக்கு மிகாமல் மஸாஜ் செய்து தூண்டிவிட்டால், தலைமுடியில் வளர்ச்சி கூடுகிறது என 2016ம் ஆண்டு தாரோ கொயாமா என்ற ஜப்பானிய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்
  • முகம் , உடலில் உள்ள தழும்புகளை வைட்டமின் –இ போக்கும்  என்பது சரியா?-  தோலில் தடவும் க்ரீம்களில் வைட்டமின்-இ முக்கிய பகுதிப் பொருளாக நீக்கமற நிறைந்துள்ளது. இதனைத் தழும்புகள் உள்ள இடங்களில் தடவினால், தழும்புகள் நாளடைவில் மறையும்.என விளம்பரங்களில் கூறுவர்.ஆனால் இது உண்மையல்ல. ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த தோல் சிகிச்சை வல்லுனர் பிலிப் ஆர்டெமி  “வைட்டமின்-இ எலுமிச்சை சாறு கற்றாழை ஆகியவை முகம் தோலிலுள்ள கீறல்கள் தழும்புகள், அறுவை சிகிச்சை அடையாளங்களை அகற்றும் என்று கூறுவது தவறான நம்பிக்கை”  என்கிறார். இவற்றை அகற்ற லேசர், மைக்ரோ நீடிலிங் ஆகிய சிகிச்சை முறைகளை நாடலாம்.
  • ஒருவரது தோலை இளமையாக காட்டுவதுதான் சிறந்த சன்ஸ்க்ரீம் என்பது சரியா?- நூற்றுக் கணக்கான அழகுக் களிம்புகள் சந்தையில் குவிந்து கிடக்கின்றன. இவற்றில் எது ஒருவரை இளமையாகக் காட்டுகிறது என்று தீர்மானிப்பது கடினம். இவற்ரில் முக்கியமாக இடம் பெறும் வேதிப் பொருள், ரெட்டினோயிக் அமிலம். இதனை ரெட்டின் ஏ(Retin A)என்று எழுதுகிறார்கள். புகைப் பிடித்தலைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவு முறையைக் கையாண்டு நன்றாகத் தூங்கி வந்தால், ஒருவர் உற்சாகமாக இருக்க முடியும். தோலின் வகைக்கு ஏற்றபடி களிம்புகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.
  • சூரிய ஒளி உடலுக்கு ஆபத்தானது என்பது சரியா?- சூரிய ஒளி உங்கள் உடல்மீது எவ்வளவு நேரம் படுகிறது என்பதைப் பொறுத்தே இதனைக் கூற முடியும். சூரியனின் செயற்பாட்டைப் பொறுத்தே இதனைக் கூற முடியும். சூரியனின் செயற்பாட்டைப் பொறுத்தே நமது உடலின் உயிரியல் கடிகாரமும் இயங்குகிறது. சூரிய ஒளி அதிகளவு உடலில் படும்போது ஒருவருக்கு தோல் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இப் பாதிப்பைத் தடுக்க உடலில் சன்ஸ்க்ரீன் க்ரீம்களை பயன்படுத்துவது அவசியம். வைட்டமின்-டி சத்து உடலுக்குக் கிடைக்க சூரிய ஒளி அவசியமானது.

**********************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>