/* ]]> */
Jan 162021
 

உங்களுக்குத் தெரியுமா?- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா?

தீயணைப்பு வீரர்கள்

  • தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேதிப் பொருள்களின் கலவையைக் கொண்டது. இந்த நீர் சாதாரண பரப்பின் அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டது மேலும் இதன் ஈரத் தன்மை சாதாண நீரைவிட அதிகம். எனவே எளிதாக தீயை அணைக்க முடிகிறது.
  •  விண்வெளியில் அழ முடியாது என்பது உண்மையா? :-  விண்வெளியில் சிரிப்பது போலவே அழுவதும் சாத்தியம்தான். ஆனால் கண்ணீர் கண்களிலிருந்து கீழிறங்கி தாடை வழியாக கீழே விழாது. ஈர்ப்பு விசையே இல்லாத காரணத்தால், அப்படியே குளம் மாதிரி தேங்கி நிற்கும். விண்வெளியில் உள்ள சூழலுக்கு ஏற்றபடி உடல், மனம் இரண்டுக்கும் வீரர்களுக்கு விண்வெளி மையங்கள்  போதிய பயிற்சியளித்து அனுப்புவதால், உணர்ச்சி வசப்பட்டு அழும் சூழ்நிலை அங்கே இல்லை .
  •  தீப்பெட்டிக்கு முன்னரே லைட்டர்  கண்டுபிடிக்கப்பட்டது என்பது சரியா?- சரிதான். ஆனால், அது அப்போது தொழில்துறைக்கான பயன்பாட்டில் இருந்தது. 1825-ம் ஆண்டு ஜோகன் வோல்ஃப் கேங்டோபெரெய்னர் லேம்ப் (dobereiner’ lamp) என்பதாகும். இதற்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்துத்தான், தீப்பெட்டி கண்டறியப்பட்டது.
  •  மிளகாயில் உள்ள காரமான பகுதி அதன் விதைதான் என்பது சரியா?- உணவிலுள்ள மிளகாயை தவறுதலாகக் கடித்துவிட்டால், உடனே வாய்க்குள் வெப்பத்தையும் வலியுணர்வு எழுப்பும் காரமான சுவையையும் உணரலாம். இதற்குக் காரணம், மிளகாயின் உள்ளே உள்ள வெள்ளையான தண்டு பகுதிதான். இதிலுள்ள காப்சைஸின் (copsaisin)  எனும் வேதிப் பொருள் காரத்திற்குக் காரணம் .மிளகாயின் விதைகளில் இந்த வேதி[ப் பொருள் இல்லை. ஆனால் வெள்ளைத் தண்டுடன் ஒட்டியிருப்பதால், அதில் காரம் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது.
  • டன்ஸ் தொப்பி என்பது அறிவுக் கூர்மையின் அடையாளம் என்பது சரியா?- 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்காட்லாந்து தத்துவவாதி ஜான் டன்ஸ் ஸ்காட்டன்
    (   john dans scotus ) நீளமான தொப்பியை அறிவின் அடையாளமாகப் பிரசாரம் செய்தார். அவரைப் பின்பற்றிய மக்கள் அதனைப் பெருமையுடன் அணியத் தொடங்கினர். 1500களில் டன்ஸின் தத்துவங்கள்  காலாவதியாகத் தொடங்கின. இதன் காரணமாக டன்ஸ் தொப்பியை யாராவது அணிந்தால், அதனை நகைச்சுவை என்று  பலரும் கூறத் தொடங்கிவிட்டனர். இன்று டன்ஸ் தொப்பிக்கும் அறிவுக் கூர்மைக்கும் எந்தத் தொடர்புமில்லை.

***********************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>