/* ]]> */
Sep 022020
 

உங்களுக்குத்  தெரியுமா?- சளி பிடித்திருக்கும்போது பால் குடிப்பது அதன் பாதிப்பை தீவிரப்படுத்துமா?-

can you drink milk when you are affected by cold

  • பால், ஐஸ்க்ரீம் போன்ற பொருட்களை சளி பிடித்திருக்கும்போது சாப்பிடக்கூடாது என்பார்கள். அதில் உண்மை இல்லை. இந்த நம்பிக்கையை 12-ம் நூற்றாண்டு சீன மருத்துவர் மோஸஸ் மைமோனிடஸ் என்பவர் ஏற்படுத்தினார். ஆஸ்திரேலியாவில் 125 நபர்களுக்கு பசுவின் பால், சோயா பால் என இரண்டும் அளிக்கப்பட்டதில் இருவருக்கும் ஏற்பட்ட அறிகுறிகள் ஒன்றுபோலவே இருந்தன. சளி பிடித்திருந்தவர்கள் பாலைக் குடிக்கும்போது இருவருக்கும் ஏற்பட்ட அறிகுறிகள் ஒன்றுபோலவே இருந்தன. சளி பிடித்திருந்தவர்கள் பாலைக் குடிக்கும்போது எச்சில் தடிமனாவதால்,, குடிக்கச் சிரமப்பட்டனர். மற்றபடி அவர்களுக்கு ஏற்பட்ட சளிப் பிரச்சினை அதிகமாகவில்லை.
  •  ஒருவர் தனது காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பது  சரியா?- உடலில் குளுகோஸ் அளவு சமச்சீராக இல்லாதவர்கள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. மற்றபடி பிறர் தங்களுக்குப் பசி எடுத்தால், காலை உணவைச் சாப்பிடலாம்.  காலை உணவைக் கட்டாயம் சாப்பிட்டே ஆகவேண்டும் எனச் சாப்பிடுவது உடலைப் பாதிக்கும். எடைக் குறைப்பு உடல் ஆரோக்கியம் போன்ற லட்சியத்தோடு காலை உணவு சாப்பிடுவது தவறானது. நீங்கள் செய்யும் பணிகளைப் பொறுத்து உடலுக்குத் தேவையான சத்துக்களின் அளவு மாறுபடும். அதற்கேற்ப தினசரி சாப்பிடும் உணவு வேளைகளை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம்.  காலை உணவைத் தவிர்ப்பது உடலின் வளர்சிதை மாற்றத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை.
  • பச்சையாக காய்கறிகளை சாப்பிட்டால், சத்துகள் வீணாகாமல் உடலுக்குக் கிடைக்கும் என்பது சரியா?- இதில் சிறிது உண்மை இருக்கிறது. ஆனால் பச்சைக் காய்கறிகளைச் செறிக்கும் திறன் குடலுக்கு வேண்டும். பாலை பச்சையாகக் குடித்தால், பாக்டீரியாவின் தாக்குதல் ஏற்படும். முட்டையை வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டால்,  உடலில் சேரும் அவிட்டின் சத்து தோலில் ஒவ்வாமை, செரிமானப் பிரச்சினைகள், சிறுநீரகக் கோளாறுகளை உருவாக்கும். முட்டையை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு அதிக புரதம் கிடைக்கும்.

***************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>