/* ]]> */
Sep 112020
 

உங்களுக்குத் தெரியுமா?- கோடைக் காலத்தில் பசி ஏற்படுவது குறையுமா?

AGRICULTURAL LANDS

  • கோடைக் காலத்தில் பசி ஏற்படுவது குறையும் என்பது உண்மைதான். காரணம் அப்பொழுது வெளிப்புற சூழலால் உடல் வெப்பம் அதிகரிக்கும். அதனைக் குறைப்பதே உடலுக்கு கடினமாக இருக்கும். இச் சமயத்தில் தீவிர பசி ஏற்பட்டால்,  சாப்பிடும் உணவுகளைச் செறிக்க ஏராளமான வெப்ப ஆற்றல் தேவை. எனவே உடல் இயக்க அமைப்பு பசியைக் குறைத்து ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள கொழுப்பு சக்தியை ஆற்றலாக செலவழித்துக்கொள்கிறது.
  • விவசாய நிலங்கள் குறைந்தால், உணவு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் என்பது உண்மையா?- பயிர்களின் உற்பத்திக்கும் நிலத்தின் அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவசாயப் பரப்பு குறைந்துள்ள நாடுகள்தான் விளை பொருள்களின் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தை வைத்துள்ள விவசாயிகள் சீனாவில் 98%ம் இந்தியாவில் 74%முள்ளனர். சீனா உணவு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு. விவசாயிகள் நவீன் அறிவியல் முறைகளைப் பின்பற்றாததால், விவசாய உற்பத்தி சார்ந்த பற்றாக் குறை ஏற்படுகின்றது.
  • இந்திய வேளாண்மை பருவ மழையை நம்பியே உள்ளது என்பது உண்மையா?- உண்மைதான். இந்தியாவில் 90 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான உள்ளது. இந்தியாவில் கோதுமை விவசாயத்திற்கு 70% நிலமும் நெற்பயிர் விவசாயத்திற்கு 50 % நிலமும் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலங்கள் பருவ மழையை மட்டுமே நம்பியுள்ளன, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள்  குறைந்த மழைப் பொழிவைக் கொண்டிருந்தாலும் அதிக உற்பத்தியைப் பெற்று உணவு உற்பத்தியில் முதன்மை நாடுகளாக உள்ளன. மழை நீரை தேக்கி வைக்க பல்வேறு குளங்கள், குட்டைகள் ஏரிகளை தூர் வாரினாலே இப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

*********************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>