/* ]]> */
Nov 132020
 

உங்களுக்குத் தெரியுமா? குழந்தைகளுக்கு ஒரு நேரத்தில் ஒரு தடுப்பூசியை மட்டுமே போட வேண்டும் என்பது சரியா?

VACCINE

  • குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் பல்வேறு தடுப்பூசிகளை வழங்கினாலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளைத் தடுக்க முடியும். தடுப்பூசி செலுத்தப்படும்போது சிலருக்கு காய்ச்சல், ஒவ்வாமை ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம்.
  •  தடுப்பூசிகள் ஆபத்தானவையா?- இன்று தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை சில பிரபலங்களும் இயக்கங்களும் ஆதரித்து வருகின்றனர். ஆனால், ஒப்பீட்டளவில் தடுப்பூசிகளால் ஏற்படும் பாதிப்புகளும் இறப்புகளும் குறைவு. தடுப்பூசிகளை செலுத்தும்போது ஒருவருக்கு ஏற்படும் பக்க விளைவுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன. எனவே, பாதிப்பு காலப் போக்கில் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன.  தடுப்புசிகள் இல்லாதபோது கொள்ளை நோய்களால் ஏற்பட்ட இறப்புகளைக் கணக்கிட்டால், இதன் அவசியத்தை நாம் எளிதாக உணரலாம். டெட்டனஸ், அம்மைத் தடுப்பூசிகள் வலி மூளை அழற்சி போன்ற பாதிப்பை சிலருக்கு ஏறப்டுத்தின. ஆனாலும் மக்களைக் காப்பாற்றியதில் வரலாற்றில் இதன் பங்களிப்பு முக்கியமானது.
  • சாதாரண பார் சோப்பைவிட  திரவ வடிவிலான  சோப் சிறந்தது என்பது சரியா?- சோப்பைப் பயன்படுத்தும் முன்னர் அதை நீரில் கழுவிவிட்டு பயன்படுத்துவது சரியாஅன் முறை. நம்மில் பலரும் இதனை பின்பற்றுவதில்லை திரவ வடிவிலான சோப் பாட்டில்களில் பத்திரமாக இருந்தாலும் கையில் எடுத்து பயன்படுத்தும்போது கிருமிகள் அதில் தொற்றியிருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. திரவ வடிவிலான சோப் கைகளைக் கழுவும் விதத்தில் சற்று எளிதாக இருக்கும். ஆனால் சோப்பைவிட சுகாதாரமானது என்று கூறிவிட முடியாது.
  • சோப்பை முகத்தில் நுரை வர தேய்ப்பது ஆபத்து என்பது சரியா?- பெரிய அளவு ஆபத்து நேராது. ஆனால், முகத்தில் உள்ள தோலுக்கும் உடலின் பிற உறுப்புகளில் உள்ள தோலுக்கும் வேறுபாடு உண்டு. நம்மில் பலரும் வேறுபாடு பார்த்து சோப்பை பயன்படுத்துவதில்லை. நடைமுறையில் இது கடினமும் கூட . முடிந்தவரை பாரபின், சிலிகான், ஆல்கஹால், சர்பேட் ஆகிய வேதிப் பொருட்கள் இல்லாத சோப்புகளை பயன்படுத்த முயலலாம். இன்று பல்வேறு விததோல் வகைகளை சேர்ந்தவர்களுக்கென பல்வகை சோப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்
  • ஆன்டி பாக்டீரியல் சோப்புகள் சாதாரண குளியல் சோப்[புகளைவிட சிறந்தவையா?-  ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் 99.9 சதவீத பாதுகாப்பு என்று விளம்பரம் செய்யப்படும் ஆன்டி பாக்டீரியல் சோப்புகளில் , குறிப்பிட்ட வேதிப் பொருள்கள் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக சாதாரணணகுளியல் சோப்புகளைவிட  இவை மேம்பட்டவை என்றெல்லாம் கூற முடியாது. நேரடியான அறிவியல் ஆதாரங்கள் கிடையாது என்பதே நடைமுறை யதார்த்தம். டிரைக்ளோசன், ட்ரைக்ளோகார்பன் ஆகிய இரண்டு வேதிப் பொருள்களைக் கொண்ட ஆன்டி பாக்டீரியல் சோப்புகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) தடை செய்தது. இதற்குக் காரணம் இவை உடலின் ஹார்மோனில்  ஏற்படுத்திய மாற்றங்கள்தான். எனவே வேதிப் பொருள்கள் குறைவான சோப்பை  வாங்கி பயன்படுத்துவதே புத்திசாலித் தனம்.

**********************************         .

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>