Sep 272020
உங்களுக்குத் தெரியுமா? கிடைமட்டக் கோடு வரைந்த ஆடைகள் ஒருவரை குண்டாகக் காட்டுமா?
- கிடைமட்டக் கோடு வரைந்த ஆடைகள் ஒருவரை குண்டாகக் காட்டுமா? கிடைமட்டக்கோடு வரைந்த சட்டைகள் ஒருவரைக் குண்டாகக் காட்டும் என்பது மக்களின் பொதுவான நம்பிக்கை. ஆனால் இதற்கு எந்த ஆதாரங்களும் கிடையாது. நியூயார்க் பல்கலைக் கழகம் இதுபற்றி ஆய்வு செய்தது. மேற்சொன்னபடி பார்க்கும் எவருக்கும் குண்டாக இருக்கும் எண்ணம் தோன்றவில்லை என்பது உறுதியானது. கிடைமட்டமாக ஆடை அணிந்தவரைக்கூட ஒல்லியானவராகப் பலரும் கருதினர். உடலின் பருமனை ஆடையால் மறைக்க முடியுமா? அதைவிட உடற்பயிற்சி செய்து உடல் எடையை முறையாகப் பராமரிப்பது நல்லது.
- உயரமாக உள்ள பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிய அவசியம் இல்லையா?- ஹை ஹீல்ஸ் அணிவது ஒருவரை உயரமாகக் காட்ட மட்டுமின்றி, அவரது கால்களை அழகாகக் காட்டவும்தான். ஹை ஹீல்ஸ் செருப்புகளை அதிக நேரம் காலில் அணிவது காலில் வலி ஏற்படுத்தி வீக்கம் ஏற்படுத்தலாம். எனவே முடிந்த அளவு இவ்வகை செருப்புகளை அணிவது உடலுக்கு நல்லது. ஹை ஹீல்ஸ் காலணிகளில் நிறைய வகைகள் உள்ளன. அதனை அணிந்து பார்த்து எது ஒருவரது கால்களுக்குப் பொருத்தமோ அதனை அணிவது நல்லது.
- ஆடை அணியும் போது இரண்டு அடர்த்தியான நியோறங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது சரியா?- பச்சை ஷ்ர்ட்டும், அதற்குமேல் மஞ்சள் கோட்டும் போட்டஒருவரைப் பார்த்து பயந்து இப்படி நம்பிக்கை தோன்றியிருக்கலாம். அடர்த்தியான இரண்டு மூன்று நிறங்களைப் பயன்படுத்த நிறைய ஸ்டைல்கள் உள்ளன. இன்று கடைகளில் கிடைக்கும் ஷர்ட், பைகள் , ஷூக்கள் என பலவும் அடர்த்தியான நிறங்களையே கொண்டுள்ளன. எனவே உடலின் நிறத்துக்கு உடைகளின் நிறம் பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து தேர்ந்தெடுங்கள்.
- ஷூ, பெல்ட், பர்ஸ் என ஒரே நிறத்தில் இருப்பது அவசியமா?- அப்படிப் பார்த்து ஆடைகளை அணிந்தால், ஷூக்கள், பெல்ட் வாங்கும்போது அனைத்து பொருட்களையும் திரும்பத் திரும்ப வாங்க வேண்டியிருக்கும். சிவப்பு, மஞ்சள், பச்சை டிராஃபிக் சிக்னல் விளக்கு போலன்றி, ஒரு நிறத்தில் ஷேடில் பெல்ட், பர்ஸ், ஷூக்கள் இஉக்கலாம். இப்படி இருப்பதில் ஒன்றும் தப்பில்லை. சட்டை, பெல்ட், பர்ஸ், ஷூக்கள் இருக்கலாம். என் அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டுமென நினைத்தால், எப்போதும் துணிக்கடைகளில்தான் இருக்க வேண்டி வரும். எனவே ஏர்கெனவே வாங்கியுள்ள பொருட்களை நினைவில் வைத்து புதிய பொருட்களை வாங்கினீர்கள் என்றால் சரியாக இருக்கும்.
********************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments