Feb 152021
உங்களுக்குத் தெரியுமா?- இரவில் மேகங்கள் பளபளப்பான் அதன்மை பெறுகின்றன.
- இரவில் மேகங்கள் பளபளப்பான தன்மை பெறுகின்றன:- அனைத்து நாடுகளிலும் இரவில் மேகங்கள் பளபளப்பாக இருப்பதைப் பார்க்க முடியாது. இதற்குக் காரணம் மேகங்கள் அமைந்துள்ள தூரம்தான். மீசோஸ்பியர் அடுக்கிலுள்ள மேகங்கள் சூரிய ஒளியை பிரதிபலிக்கின்றன. சூரியன் மறைந்த பிறகும் அதன் ஒளியை மேகங்கள் பிரதிபலிப்பதால் நியூஸிலாந்து உள்ளிட்ட வடக்கு ஐரோப்பிய நாடுகளில் மேகங்கள் பளபளவென அழகு காட்டுகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவால், மேகங்களில் ஐஸ் கிரிஸ்டல்ஸ் உருவாகி அவை பளபளப்பாகத் தோன்றுகின்றன என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் மேக பளபளப்பிற்குக் காரணம் கூறுகின்றனர்.
- நமது கரங்களில் ஏதேனும் ஒரு கரம் மட்டுமே சிறப்பாக செயல்படும் :- உலகில் 90 % மக்கள் பெரும்பாலான வேலைகளுக்கு வலது அல்லது இடது என ஏதேனும் ஒன்றையே பயன்படுத்துகின்றனர். இது மரபணு மற்றும் சூழல் தொடர்பானது, வலது அல்லது இடது என இரண்டு கைகளில் எதற்கு பயிற்சி கொடுக்கிறீர்களோ அதுவே சிறப்பாக செயல்படும்.
- எரிபொருளில் உள்ள ஆக்டேன், இஞ்சினை சேதப்படுத்துகிறது:- எரிபொருளில் உள்ள முக்கியமான ஹைட்ரோகார்பன் , ஆக்டேன் எரிபொருளில் உள்ள ஆக்டேன் அதிக தர மதிப்பீடு கொண்டுள்ளபோது, இஞ்சினுள் காற்று, எரிபொருள் கலக்கும் சதவீதத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், இஞ்சின் சேதப்படும் சதவீதம் குறையும். அதிக தர மதிப்பீடு கொண்ட ஆக்டேன் பெட்ரோல், டீசலில் இருக்கும்போது இஞ்சின் அதனை எரிக்கும் வேகம் மட்டுப்படும் . எனவே வாகனத் தயாரிப்பாளர்கள் . பயன்படுத்தும் இஞ்சின் வகைகளைப் பொறுத்து இதனைத் தீர்மானித்து எரிபொருளை வாங்குவது சிறப்பு.
- மாயன் நாகரீகம் பஞ்சத்தால் அழிந்தது:- குறிப்பிட்ட் பகுதியில் வாழும் மக்கள் அழிந்து போவதற்கு கொள்ளை நோய் , நிலம் வளமிழப்பு, அந்நிய படையெடுப்பு எனபல்வேறு காரணங்கள் உண்டு,சின்சினாட்டி பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ;திகல்’ எனும் மாயன்களின் நகரை ஆராய்ந்தனர் . 1200 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு 10,000 க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்தது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய குவாத்த மலையில் இந்த நகரம் அமைந்துள்ளது. மக்களின் அழிவிற்கு பஞ்சம் ஒரு காரணம் என்றால்ம் அவர்களது குடிநீரில் கலந்த மெர்க்குரிக் சல்பைடை மற்றொரு காரணமாக உயிரியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். நகரச் சுவர்களுக்குப் [பூசிய சின்னபார் (cinnabar HgS) எனும் கனிமத்திலுள்ள மெர்க்குரி சல்பைடு கரைந்து ஆறுகளில் கலந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
******************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments