/* ]]> */
Dec 172020
 

உங்களுக்குத் தெரியுமா?- அழும்போதுமூக்கில் நீர் கொட்டுவதற்கு கண்ணீர்தான் காரணமா?

-WHEN YOU CRY, YOU HAVE RUNNY NOSE

  • அழும்போது மட்டுமின்றி குளிர், காரமான உணவுகள், புகை ஆகியவற்றின் போதும் மூக்கிலிருந்து நீர் கொட்டும். இது உண்மையில் கண்களிலிருந்துதான் உருவாகிறது. கண்களில் மேல், கீழ் கடைக்கோடியில்லேரிமேல் ப்ங்டா( Lacrimal puncta)  எனும் சிறு துளைகள் உள்ளன.  இதிலிருந்து உருவாகி வரும் நீர் மூக்கின் பாதையை சந்திக்கும் இடம் லேக்ரிமால் கனாலிகுலி (Lacrimal canaliculi ), எனவே கண்களில் உருவாகும் கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடாதபோது மூக்கின் வழியே வெளியேறும்.
  • ஸ்பானிய காய்ச்சல் இன்று பரவினாலும் அதிக மக்களைக் கொல்லும்!:- 1918-1920  காலக் கட்டத்தில் ஸ்பானிய காய்ச்சல் கொள்ளை நோயாக பரவியது. இதனால், உலகமெங்கும் 50 கோடிக்கும் அதிகமானோர் பலியகினர். இன்று அதே கொள்ளை நோய் திரும்ப பரவினால், முன்பைவிடக் குறைந்த எண்ணிக்கையிலேயே பலியாக வாய்ப்புண்டு. அன்று ஸ்பானிய காய்ச்சலுக்கு பாக்டீரியாதான் காரணம் என மருத்துவர்கள் நினைத்தனர். இன்று ஆன்டிபயாட்டிக் மருந்துகள் , வென்டிலேட்டர் வசதிகள், மருத்துவ சிகிச்சை பெருமளவு முன்னேறியிருப்பதால், அதிக பாதிப்பு நேராது.
  • பூச்சிக் கொல்லிகள் மனிதர்களைப் பாதிக்காது.:- இன்று நாம் உண்ணும் தானியங்கள், பருப்பு, அரிசி, காய்கறி, பழங்கள் ஆகியவற்றைப் பூச்சிக்கொல்லிகள் உதவியின்றி விளைவிப்பது கடினம். 1974 முதல் விவசாயிகள் ‘கிளைபாஸ்டேட்’ என்ற வேதிப் பொருளை களைகளை அழிக்கவும் பயிர்களை உலர்வாக வைக்கவும் பயன்படுத்துகின்றனர். இது லிப்போமா எனும் புற்றுநோயை உருவாக்குகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆர்கனோபாஸ்பேட்டுகளும் பாதிப்பை ஏற்படுத்தும். உலக நாடுகள் அங்கீகரிக்கப்பட்ட வேதிப்பொருட்களின் அளவை வலியுறுத்துகின்றன. இவை குறிப்பிட்ட அளவில் நம் உடலுக்குள் சென்றாலும் ஆபத்தை ஏற்படுத்தாது. காய்கறிகள், பழங்களை முடிந்தளவு நீரில் நன்றாகக் கழுவிவிட்டுப் பயன்படுத்துவது பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பைக் குறைக்க உதவும்.
  • கடினமான வேலையைச் செய்யும்போது ஒலி எழுப்புவது உற்சாகத்தைத் தரும்:- 2014ம் ஆண்டு டென்னிஸ் மைதானத்தில் ஒலி எழுப்பியபடி விளையாடுவது வீரர்களுக்கு சர்வீஸை வலுவாகப் போட உதவுகிறது என்று கண்டறிந்தனர். பொதுவாகக் கடினமான வேலையைச் செய்யும்போது உடல் இறுக்கமாகும்.இதனை நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் தசைகளை நெகிழச் செய்தால், வேலையை எளிதாகச் செய்யலாம். இதற்கு பேசுவது, கத்துவது, மூணுமுணுப்பது ஆகியவை உதவும். விளையாட்டுக் களத்தின் வீரர்கள் சர்வீஸின் போது எழுப்பும் ஒலி இப்படிப்பட்டதே.

**********************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>