/* ]]> */
Mar 262013
 
 அமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் :
               இலங்கை இனப் படுகொலைகள் தமிழகத்தில் மூட்டிய கனல் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. என்னதான் நடந்தது இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானத்தில்?
                         அமெரிக்காவின் 4-வது திருத்த வரைவு தீர்மானத்தில் இருந்த வாசகங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் முதலில் இருந்த பல வாசகங்கள் நீக்கப்பட்டிருந்தன. திர்மானத்தில் ‘வற்புறுத்துகிறோம்’ (URGES) என்ற வார்த்தை இலங்கையை ‘ ஊக்கப்படுத்துகிறோம்’(ENCOURAGES) என்று மாற்றப்பட்டிருந்தது. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதைப்போல , இலங்கை அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டியும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. ‘    பன்னாட்டு மனித உரிமைச் சட்டம் மீறப்பட்டதை விசாரிக்க வேண்டும் ‘என்று ஏற்கெனவே இருந்த வாசகம் முழுவதும் நீக்கப்பட்டுள்ளது. இனப் படுகொலைகள் , மனித உரிமை மீறல்கள் குறித்து குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ஒரு சர்வதேச அமைப்பு விசாரித்து அறிக்கை அளிக்கவேண்டும்  என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த இடத்தில் சில  கேள்விகள் எழுவது இயற்கையே.
                       மேலே சொன்னபடி அமெரிக்கத் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது யார்? அப்படியான நீர்த்துப்போகும் காரியத்தை இந்தியப் பிரதிநிதி தடுக்காதது ஏன்? அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை மேலும் வலுவாக்கவேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கை ஏற்கப்படாதது ஏன்? இலங்கைத் தமிழர்களின் இனப் படுகொலைகளுக்கும், , இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் பரிகாரம் காணவே முடியாதா?
                          கொடுமை என்னவென்றால், ஜெனிவாவில் அமெரிக்க அரசின் பிரதிநிதி , தங்கள் தீர்மானத்துக்கு மற்ற நாடுகளின் ஆதரவைக் கேட்கிறார். இலங்கையும் தன் தரப்புக்கு ஆதரவைத் தேடுகிறது. ஆனால், இந்திய அரசின் பிரதிநிதி ஜெனிவாவில் இப்படிப்பட்ட எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்தது.  இப்படிப்பட்ட பாராமுகத்தைப் பார்த்து  20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் கிளர்ந்தெழுந்து மறியல்களிலும் , உண்ணாவிரதப் போராட்டங்களிலும், ஈடுபட்டுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் தீக்குளிப்புச் சம்பவங்களும் நடைபெறத் தவறவில்லை. நல்ல முடிவுக்காகவும் நியாயம் கிடைப்பதற்காகவும்  காத்திருப்போம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.