/* ]]> */
Apr 092013
 
இலங்கைத் தூதரும் , இலங்கை செய்தி ஒலிபரப்பும்:
                             டில்லியிலுள்ள இலங்கைத் தூதர் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை இங்கு ரகசியமாகச் செய்து வருகிறார். அத்துடன் சிங்களர்கள் வட இந்தியாவில் பூர்வீக குடியிரிமை பெற்றவர்கள் என்றும், அவர்களுடைய பாதுகாப்புக்கு குந்தகம் எதுவும் நேராமல், இந்திய அரசாங்கம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும் என்றும்  தமிழர்களுக்கு எதிராகவும் பல மீடியாக்களுக்கு ரகசியமாகப் பேட்டியளித்து வருகிறார்.  இவருடைய செயல்கள் தடுத்துநிறுத்தப்படவேண்டுமென்று இங்குள்ள பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான டி. ராஜா  என்பவர், இதனை வன்மையாகக் கண்டித்துள்ளார். அத்துடன் இலங்கைத் தூதர் அவரது செயலுக்கான விளக்கத்தை அளிக்கவேண்டுமென்றும்  இது பற்றிய புகார் ஒன்றை இலங்கைக்கு அனுப்பவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
          பிபிசி வானொலி :
                            பிபிசி வானொலியின் பண்பலை வரிசை தமிழர்கள் பற்றிய செய்தியையும்,தமிழர்களுக்கு வெளி உலக செய்தியையும் ஒலிபரப்பும். தற்போது, இலங்கைக்கு எதிரான எதிப்பலை உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் , இலங்கை வானொலி , ஒலிபரப்பில் நுழைந்து செய்திகளைத் திரித்து ,பொய்ச் செய்திகளை ஒலிபரப்பும்படி நிர்ப்பந்திப்பதால், பிபிசி  தன்னுடைய ஒலிபரப்பை நிறுத்திவைத்துள்ளதாகத் தகவல்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.