/* ]]> */
Jan 182014
 

இன்னிசை
இசைத்தது தென்றல்
சுருதி மீட்டியது
கருவண்டு
கானம் பாடியது
இளங்குயில்
தாளம் போட்டது
அடைமழை
லயித்துத் தலையாட்டின
மரங்கள்
ரசித்து சிறகுக் கைதட்டின
பட்டாம்பூச்சிகள்
மெல்லிதழ் விரித்து
முறுவலித்தன மலர்கள்
மகிழ்ச்சியில் காற்றில்
மிதந்தன மேகங்கள்
சூரியனும் சொக்கித்
தன் சுடுகரம் மடக்கிட்டான்
அருவியும் கேட்டு மயங்கி
சரிந்து விழுந்தது
விண்தொட்ட இமயமலையும்
கரைந்து பனி உருக்கியது
அலைகடலும் ஆர்ப்பரித்தே
உற்சாகம் ஊட்டியது
சின்னக் குருவியும்
சிலிர்த்தே சிறகடித்தது
வண்ண வானவில்லும்
ஆவலுடன் எட்டிப் பார்த்தது
கூடவே துணைக்கு இறையை
அழைத்து வந்தது
இறைவனும் பூமியைப்
பசுமையாக்கினான் பரிசாய்
இவற்றை ரசிக்காத பணம் மட்டுமே
தேடிக் கொண்டிருக்கும்
மனிதனோ அதைப் பாழ்படுத்தினான்
பெரிசாய்
அதனால் பெருமையில்
ஆகிப் போனான் சிறுசாய்
சிறுசாகி சிறுசாகி இறுதியில்
மண்ணில் கலந்து போனான்
அவன் சமாதியில் விழுந்தது
ஓர் மழைநீர்த் துளி
முதன்முதலாய் ஸ்பரிசித்த துளியினால்
புத்துயிர் பெற்று மீண்டும் எழுந்து
மழையில் குளித்து நடனமிட்டு
இயற்கையை ரசித்தான்
தான் இருந்த இடத்தில்
ஓர் மரம் நட்டான்
வேலி இட்டான்
சிட்டுக்குருவிக்கு நெல்மணிகள்
அளித்தான்
கடலிலே கயல் போல
நீந்தி களித்தான்
வயலிலே மாடு போல
சுற்றிச்சுற்றி உழைத்தான்
ஆஹா
எங்கும் பசுமை வளமை
இனிமை சூழ்ந்தது !

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>