Aug 062010
செய்தி : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல். மூன்று அதிகாரிகள் சஸ்பெண்டு!
இடைச்செருகல் : விளையாட்டுலயும் “வெளையாடுறது”தான் இந்தியன் ஸ்டைல்
செய்தி :செல்ஃபோன்களில் தேவையற்ற அழைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை! அரசு அறிவிப்பு
இடைச்செருகல் : ஜொல்ஸ் ஜொல்லப்பன் : அப்படியே தேவையான பார்டிங்களை கால் பண்ண ஒரு சட்டம் போட்டீங்கன்னா நல்லா இருக்கும்!
செய்தி :14 மாத்ங்களாக சோனியா அத்வானி உட்பட 130 எம்பிக்கள் தொகுதி நிதியிலிருந்து ஒரு பைசா கூட செலவளிக்கவில்லை . செலவில் அழகிரி முதலிடம்!
இடைச்செருகல் :எம்பிக்களோட சேர்ந்து நிதியும் தூங்குது ! ஆனா எம்பியாவும் நம்ம தலைவர் அதிரடியா கலக்குறாரு !
செய்தி :இந்தியாவில் நாணயத் த்ட்டுப்பாடு இல்லை – ரிசர்வ் பாங்க் துணை ஆளுணர் தகவல்
இடைச்செருகல் : ஆமாமா , இந்தியாவுல் “நாணயம்”தான் தட்டுப்பாடா போச்சு!
செய்தி :அஜித் நான்கு புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார்
இடைச்செருகல் : ஒரு படமே தாங்காதுடா சாமி!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments