Aug 032010
செய்தி : விலைவாசி உயர்வு பற்றி ஓட்டெடுப்பு இல்லாமல் பாராளுமன்றத்தில விவாதம்
இடைச்செருகல் : ஆமாமா ஓட்டுன்னு வந்தாலே பிரச்சினைதான்!
செய்தி : ஆஸ்பத்திரிகளில் நடக்கும் ஆபரேஷங்களை வீடியோ படம் எடுக்க வேண்டும் – கனிமொழி வலியுறுத்தல்
இடைச்செருகல் : பாத்துங்கம்மா, அப்புறம் டாக்டருங்க எல்லாம் மேக்கப்பு போட்டு வந்திட்டு பேஷண்ட பாக்காம கேமராவையே பாக்கப் போறாய்ங்க!
செய்தி : காம அர்ச்சகர் தேவநாதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இடைச்செருகல் : இப்பத்தான் இவிங்க குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யுறாங்க! இதே காண்டி நம்ம அர்ச்சகரா இருந்தா இந்நேரம் பூஜை பண்ணி கற்பூரம் கொளுத்தியிருப்பாரே!
செய்தி : நடிகை ரம்பா கர்ப்பம்!
இடைச்செருகல் : பத்திரமா தொடையை….. இல்லை …..உடம்பைப் பாத்துக்கங்க!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments