/* ]]> */
Sep 072011
 

இன்று காலை டெல்லி உயர்நீதி மன்ற வளாகத்திற்கு மிக அருகில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது . CNN  செய்திகளின் படி 10 பேர் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

AIIMS HELPLINE: 011-26101925

RML HOSPITAL HELPLINE: 011- 2374 4721/ 2336 5525

SAFDARJUNG HOSPITAL HELPLINE: 011- 2670 7444

காயமடைந்தவர்கள் மேற்காணப்படும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிரார்கள். குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு விரைந்த அமைச்சர் ப. சிதம்பரம், “டெல்லி போலீசார் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தும் இந்த துரதிருஷ்ட்டவசமான சம்பவம் நடந்து விட்டது. சதியின் பின்னனி இன்னமும் தெரியவில்லை. அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது சம்பவம் குறித்து. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் நாடு ஒன்று பட்டு உறுதி காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

5 ஆம் எண்ணிட்ட கதவின் அருகில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பின் போது அங்கு இருந்த பெண் வக்கீல் ஒருவர் ” அது மிக சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு. சம்பவ இடத்தில் ஏராளமான ரத்தம் காணப்பட்டது ” என்று கூறியிருக்கிறார்.

காவல் துறையினரின் விசாரணையில் காலை 10. 17 க்கு சரியாக குண்டு வெடித்திருக்கிறது.

குண்டு ஒரு சூட்கேசில் வைக்கப்பட்டிருந்திருக்கிறதும் தெரியவந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் நடந்துள்ள 2 ஆவது குண்டு வெடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>