/* ]]> */
Mar 132019
 

இனிமையான குரல் கிடைக்க என்ன செய்யலாம்?

இனிமையான குரல்

குரலை இனிமையாக வைத்துக்கொள்ள அனைவரும் விரும்புவர். இனிமையான குரலை விரும்புவோர், சத்தமாகப் பேசக்கூடாது. குரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிகள் கீழே தரப்பட்டுள்ளன:

  • சாப்பிடும்போது பேசக்கூடாது. பேசிக்கொண்டே சாப்பிட்டால், உணவு, உணவுக் குழாய்க்குப் போவதற்குப் பதில் மூச்சுக் குழாய்க்குள் போய்விடும். இதனால், குரல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
  •  புளித்த ஏப்பம் தொண்டையில் ஏற்படும்போது குரல் கெடும். விக்கல் ஏற்படுவதாலும் குரல் கெட வாய்ப்பிருக்கிறது. மது அருந்துதல், புகைப் பிடித்தலைத் தொடரும்போது குரல் நாண் கெட்டு  குரல்வளையில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தோன்றும். முதல் அறிகுறியாக குரல்நாண் தடித்துப் போகும்.
  • தொண்டையிலிருந்து காற்று வர தடை ஏற்பட்டாலும் குரல் மாறும். முக்கியமாக குறட்டை விடுபவர்களுக்கு குரல் தடித்துப் போகும். குரல் தெளிவாக இருக்காது. அதுபோல் வாயும் அடிக்கடி உலர்ந்து போகும். இதையும் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
  • தினமும் சீரான இடைவெளியிலமுடிந்த அளவு அதிக தண்ணீர் பருக வேண்டும். பிரணாயாமப் பயிற்சி மே ற்கொள்ளவேண்டும்.

 

  •  தொடர்ந்து 15 நிமிடங்கள்  பேசினால், இடையில், சில நிமிடங்கள் தொண்டைக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

 

  • அதிக சூடான , அதிக குளிர்ச்சியான உணவுப் பொருள்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.

 

  • அதிக சத்தமாக ஒருபோதும் பேசக்கூடாது.

 

  • மாதுளை முத்துக்களிலிருந்து சாறு எடுத்து அதில் தேன் கலந்து பருகவேண்டும்.

 

  •  சிறிய வெங்காயத்தை நறுக்கி வெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும்.

 

  • இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் சிறிதளவு மஞ்சள்தூள், மிளகுத்தூள் கலந்து அருந்தினால், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு நீங்கி குரல் இனிமையாகும்.

 

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>