/* ]]> */
Mar 042019
 

இனிப்புப் பண்டங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ‘சில்வர் ஃபாயில்’ உடலுக்குக் கேடு விளைவிக்குமா?

வெள்ளி ஜரிகைத் தாள்

‘ சில்வர் ஃபாயில்’ என்பது வெள்ளி ஜரிகைத் தாள். இது சுத்த வெள்ளி உலோகத்தை . 2 முதல் . 8 மைக்ரான் அளவு மெலிதாக்கும்போது கிடைக்கிறது. ஒரு மைக்ரான் என்பது தலைமுடியின் தடிமனில் 50ல் ஒரு பங்கு. இதைவிட மெலிதாகச் செய்யும்போது சுமார் ஒன்றிரண்டு அணுக்கள் அளவே வெள்ளியின் தடிமன் இருக்கும்.  இது (வராக்) என்ற பெயரில் ஆயுர்வேத மருத்துவம் உட்பட பல்வேறு வகைகளில் உணவாகப் பயன்படுகிறது.

சில சமயம் தங்கத்தில் கூட  இவ்வாறு ஜரிகைத் தாள் செய்து பயன்படுத்துவார்கள். சுத்தமான வெள்ளி உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிறது. எனினும் தற்காலத்தில், கலப்பட அலுமினியத்தில் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொழில் நஞ்சு ஆய்வக  மையம்  நடத்திய ஒரு ஆய்வில் சுமார் 50% மாதிரிகள் சுத்த வெள்ளியில் செய்யப்பட்டு இருப்பதாகவும் 10% கலப்பட அலுமினியம் என்றும் கூறப்படுகிறது.  அதன் அடிப்படையில் உணவுப் பொருட்களில் வெள்:ளி ஜரிகைத் தாள் பயன்பயடுத்துவதை தமிழக உணவு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஏற்பதில்லை.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>