/* ]]> */
Nov 242014
 

இந்தியா வல்லரசாகும்- நடிகர் விஜய்:

VIJAY
‘ நலத்திட்ட உதவிகளை வானக் எப்போது ஆட்கள் இல்லையோ, அப்போதுதான் இந்தியா வல்லரசாகும்.’ என்கிறார், நடிகர் விஜய்.
தனுஷை புலம்பவிட்ட காக்கி சட்டை:

DHANUSHsivakarthikeyan
சிவகார்த்திகேயனை, ‘ என் தம்பி மாதிரி’ என்று மேடைகளில் தனுஷ் சொல்லிக்கொண்டாலும், ‘ தனுஷின் இடத்தைப் பிடிப்பதுதான் என் டார்கெட்’ என்று சிவகார்த்திகேயன் வெளிப்படையாக சொன்னதிலிருந்து, அவரக்ளின் அண்ணன்-தம்பி உறவில் கீறல் விழுந்துள்ளது. இருப்பினும் தன் ஒண்டர்பார் நிறுவனத்துக்காக ஏர்கெனவே அவரை ஒப்பந்தம் செய்திருப்பதால், அவரை வைத்து தற்போது ‘ காக்கி சட்டை ‘ படத்தை தயாரித்து வருகிறார், தனுஷ்.மேலும் இப்படத்துக்கு முதலில் ‘ டாணா’ என்றுதான் பெயர் வைத்திருந்தார். ஆனால், அந்தப் பெயரை சென்ஸார் அனுமதிக்காது என்பதால், ‘ காக்கி சட்டை ‘ யாக மாற்றினார். ஆனபோதும் இதே தலைப்பில் ஏற்கெனவே கமல் நடித்திருந்தபோதும், அப்படத்தை தயாரித்த நிறுவனத்தை அணுகி உரிமை கேடட்போது, அதற்கு அவர்கள் 50 லட்ச ரூபாய் விலை வைத்தனர். அதனால், வேறு வழியில்லாமல், அந்தத் தொகையைக் கொடுத்துள்ள தனுஷ், ஏற்கெனவே போட்ட பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாகிவிட்டது. செலவு செய்த காசை எப்படி எடுகக்ப்போகிறேன்’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.
திறமைதான் சினிமாவில் வெல்லும்- ஹன்சிகா:

hansika, poonam bajwa and ravi
ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில், ஹன்சிகாவும், பூனம் பாஜ்வாவும் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு தளங்களில், இவரக்ளுக்கிடையே, பனிப்போர் நடப்பதாக செய்தி பரவியுள்ளது. இதுபற்றி, பூனம் பாஜ்வாவிடம் கேட்டபோது’ அப்படியெல்லாம் இல்லை’ என மறுத்துள்ளார். ஹன்சிகாவோ, ‘பூனம் பாஜ்வாவை என் சகோதரியாக நினைக்கிறேன் எங்களுக்கு இடையே பனிப்போரும் இல்லை; எந்த அக்கப்போரும் இல்லை. படப்பிடிப்பிலேயே, இருவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டோம். படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு சென்றால்கூட , போன் மூலம் பேசிக்கொள்கிறோம்.’ என்கிறார். மேலும், ‘சினிமாவும் யாரும் யாருக்கும் போட்டியாகிவிட முடியாது. திறமை உள்ளவர்கள் மட்டுமே நிலைக்க முடியும்’ என தத்துவத்தையும் உதிர்க்கிறார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>