ஆரோக்கியம் சம்பந்தமான கேள்வி-பதில் :
1. வியர்க்குரு வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?
தினமும் இரண்டு வேளை தேய்த்துக் குளிக்க வேண்டும்? வியர்வை அதிகமக வருகிறது எனில் மூன்று நான்கு முறைகூட குளிர்ந்தநீரில் குளிக்கலாம். வெயிலில் வெளியே செல்லும்போது, மருத்துவ ஆலோசனைப்படி, சருமத்திற்கு ஏற்ற மாய்ச்சரைசர், சன் ஸ்கிரீன் போட்டுக்கொள்ளவேண்டும். தினமும் காலையில் கேரட் ஒன்றை சாப்பிடவேண்டும். ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ஆரஞ்சு, வெள்ளரி, தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். தினமும் ஏதாவது பழச்சாறு அருந்தலாம்.
2. எனக்கு வயது 30 ஆகிறது. திடீரென சிறுநீர் தானாக வெளியேறுகிறது. என்ன காரணம்?
பல பெண்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல், இருந்த இடத்திலேயே சிறுநீர் கசியும் பிரச்சினை இருக்கிறது. சுருங்கி-விரியும் தன்மை இழத்தல், இளம் வயதிலேயே கர்ப்பப்பை அகற்றுதல், தசைகள் தளர்வடைதல்,மெனோபாஸ், உடல் அருமன், தொடர் இருமல், மலச்சிக்கல், நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள், நிறையமுறை சுகப் பிரசவம் நட்த்தல் போன்ற காரணங்களால் உடலில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. இதற்கு தகுந்த மருத்துவரை அணுகி தீர்வு காணவும்.
3. எனக்கு வயது 58. அடிக்கடி பல விஷயங்கள் மறந்து போய்விடுகின்றன. ‘அல்சைமர் நோய்’ காரணமா? ‘அல்சைமர் என்றால் என்ன?
நம்முடைய நினைவாற்றல் மற்றும் மூளை செயல் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவது ‘டிமென்ஷியா’ என்ற நிலை. அதற்கு முக்கிய காரணம் ‘அல்சைமர்’ நோய். நெருக்கடியான விஷயங்களை பார்க்கும்போதோ, பேசும்போதோ குழம்புவது, வார்த்தைகளை மறந்துவிடுவது போன்றவை டிமென்ஷியா என்ற நிலையின் அறிகுறி. வயது அதிகரிக்கும்போது, மூளையில் சுரக்கும் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்கள் மூளையில் உள்ள நியூட்ரான்களின் செயல் இழப்பு போன்றவையே ‘அல்சைமரு’க்குக் காரணம். அல்சைமரில் பல நிலைகள் உள்ளன. ஆரம்ப கட்டத்தில் தினமும் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மறந்துபோகும். உதாரணமாக, இரவு சாப்பிட்ட உணவு, காலையில் படித்த செய்தி, சந்தித்த நபர். சென்று வந்த சினிமா போன்ற விஷயங்கள் மறந்து விடும். அடிக்கடி காரணமில்லாமல் கோபம் வரும். ஒரு கட்டத்தில் அல்சைமரின் தாக்கம் அதிகரிக்கும்போது கணவன், குழந்தைகள், மனைவி, அம்மா, அப்பா என்று உறவினர்கள், நண்பர்கள் கூட மறந்து போகும்.
^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments