/* ]]> */
Jul 062011
 

ஆனித் திருமஞ்சன மகிமைகள்

chidambaram_Natarajar - சிதம்பரம் நடராஜர்

chidambaram_Natarajar - சிதம்பரம் நடராஜர்

வருகிற 7-ந்தேதி ஆனித் திருமஞ்சனம் வருகிறது.  சிதம்பரம் திருத் தலத்தில், ஆனித் திருமஞ்சன விழா 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. முதல் எட்டாம் நாள்வரைஉற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்ரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும், தங்க வாகனங்களில் வீதி உலா வருவார்கள்.  ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா நடைபெறும். அன்று பஞ்ச மூர்த்திகளும், 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். மேலும் அப்போது மூலவர் நடராஜரே  தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது. தொடர்ந்து, நடராஜரையும் அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு  அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.  பொதுவாக மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு தினந்தோறும், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆனால், சிதம்பரம் கோவிலில் நடரஜப் பெருமானுக்கு தினமும் அபிஷேம் செய்யும் வழக்கம் இல்லை. வருடத்துக்கு 6 முறைதான் ஆராதனை நடைபெறும். அந்த வகையில் ஆனி உத்திரத் திருமஞ்சனம் மிகவும் சிறப்பானதாகப் போற்றப்படுகின்றது.   ஆடலரசரான நடராஜப் பெருமானை சிறப்பிக்கும் ஆனித் திருமஞ்சனவிழாவில் சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டால்,  நீடூழி  வாழ்கின்ற சுமங்கலி பாக்கியத்தைப் பெறுவார்கள். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல்பலமும்  வளமும் கூடும் என்பது ஐதீகம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>