/* ]]> */
Jun 222011
 
ஷிர்டி சாய்பாபா

ஷிர்டி சாய்பாபா

 

1. மருந்தீஸ்வரர்கோவில்:- இத் திருத்தலம் திருவான்மியூரில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் சிவபெருமானை வழிபட்டால், தீராத நோய்களும் தீரும் என்று நம்பப்படுகிறது. அதனால், இறைவனை ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். இங்கு ஒரு மூலிகைத் தோட்டம் உள்ளது. 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு ராம காவியம் தந்த வால்மீகி வந்ததாகக் கர்ண பரம்பரைச் செய்தி ஒன்று கூறுகிறது.

2. வட சபரிமலை:- ராஜா அண்ணாமலைபுரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலையைப் போன்று சென்னையில் ஐய்யப்பனுக்கு அமைக்கப்பட்ட கோவில் இது. அச்சு அசலாக சபரிமலைக் கோவிலைப் போன்றே அமைந்தது இக்கோவிலின் தனிச் சிறப்பு.

 

3. சாய்பாபா கோவில்:- மைலாப்பூரில் ஷீரடி சாய்பாபாவுக்கு அமைந்துள்ள கோவில் இது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இங்கு நடக்கும் அக்னி பூஜை சிறப்பு மிக்கது.

4. ராமகிருஷ்ணர் கோவில்:- சுவாமி விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ணர். இவருக்கான கோவில் மைலாப்பூரில் அமைந்துள்ளது. சர்வ மதக் கோவிலான இது தென்னிந்தியக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தியானம் செய்து செல்கிறார்கள். இக்கோவிலில் பகவான் ராமகிருஷ்ணருக்கு 7 அடி உயரச் சிலை அமைக்கப்பௌள்ளது. தாமரை மலரின் நடுவே அவர் வீற்றிருக்கிறார். அனைத்து மதத்தினரும் இங்கு வந்து செல்கிறார்கள்.

5. வடபழனிஆண்டவர் கோவில்:- தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் மூன்றாவது படைவீடு பழனி. ஒரு நூற்றாண்டைக் கடந்த இக் கோவில் பழனிமலை முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழா பிரசித்தி பெற்றது.

6. அஷ்டசட்சுமி கோவில்:- அஷ்ட லட்சுமிகளையும் தரிசனம் செய்யும் வகையில் எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள கோவில் இது. சிறுசிறு வளைவு நெளிவுகளில் நுழைந்து அஷ்ட லட்சுமிகளையும் நாம் தரிசனம் செய்யும் அனுபவம் வித்தியாசமானது. இக்கோவிலி லட்சுமிதேவி தனது எட்டு முகங்களாலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். நவராத்திரி விழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

7. மத்திய கைலாஷ்:- தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் நிறைந்துள்ள அடையாறில் வெண் பளிங்குக் கற்களில் உருவாக்கப்பட்ட அமைதி தவழும் திருத்தலம் இது. வலப்புறத்தின் நடுவில் வினாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். தந்தை பரமேஸ்வரன், அம்மை உமையவள், ஆதித்யன் மற்றும் திருமால், ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். இங்கு அம்மனுக்கும் பைரவருக்கும் சன்னிதிகள் தனியே உள்ளன.

8. பாம்பன் சுவாமிகள் கோவில்:- ராமனாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ள பாம்பனில் 1850ம் ஆண்டு அவதரித்தவர் பாம்பன் சுவாமிகள். இவர் 1922ல் முக்தி அடைந்தார். திருவான்மியூர் மயூரபுரத்தில் இவரது சமாதி மற்றும் கோவிலாகவும் அமைந்துள்ளது.

9. பார்த்தசாரதி கோவில்:- மெரினா கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம் இது. எழில் நிறைந்த சிற்பங்கள் நிறைந்த இந்தக் கொவிலுக்கு உயர்ந்த கோபுரங்களும் பரந்து விரிந்த பிரகாரங்களும் மேலும் பெருமை செர்க்கின்றன. இக்கோவில் ‘தென் திருப்பதி’ என்று அழைக்கப்படுவத்ல், இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் இங்கு வருகை தருகிறார்கள். குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தவர் கிருஷ்ண பகவான். அந்தப் போரில் அர்ஜுனன் போர் புரிய மறுத்தபோது, அவனுக்கு கிருஷ்ண பரமாத்மா உபதேசித்ததுதான் பகவத் கீதை. அவர், அர்ஜுனனுக்கு உபதேசம் காட்சி இங்குள்ள கோபுரத்தையொட்டி அழகாக செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் அர்ஜுனனுக்கு தேரோட்டிய காரணத்தாலேயே இங்குள்ள பெருமாள், ‘பார்த்தசாரதி’ என்று அழைக்கப்படுகிறார். இங்கு இவர் மீசையுடன் அருள்பாலிப்பது தனிச் சிறப்பு.

 

10. காளிகாம்பள் கோவில்:- வர்த்தக நெரிசல் மிகுந்த பாரிமுனையில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கோவில்கொண்டிருப்பது பராசக்தியின் மற்றொரு திரு உருவமான உக்கிர சொரூப காளி. ம்ராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி 3.10.1677 அன்று இக்கோவிலுக்கு வந்து வழிபட்டதாக இங்குள்ள கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

 

11. கபாலீஸ்வரர் கோவில்:- மைலாப்பூரில் அமைந்துள்ள இக்கோவில் சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று. பார்வதிதேவி மயில் உருவில் வந்து சிவனை வழிபட்டதால், இத்திருத்தலம் ‘திரு மயிலை’ என்று அழைக்கப்படுகின்றது. பெரிய அளவில் அமைந்த திருக்குளம் கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. கோவிலைச் சுற்றி நான்கு மாட வீதிகள் அமைந்துள்ளன. திருஞான சம்பந்தர் பதிகம் பாடிய திருத்தலம் இது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பத்து நாட்கள் நடக்கும் திருவிழா இங்கு விஷேஷம். திருவிழாவில் பத்தாம் நாள் நடக்கும் அறுபத்து மூவர் திருவிழாவைக் காண திரளான பக்தர்கள் குவிந்து விடுவார்கள்.

12. விவேகானந்தர் இல்லம்:-
இந்திய இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தைஏற்படுத்திய வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் தங்கிய இல்லம்தான் இது. மெரினா கடற்கரையை ஒட்டி இது அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த மாளிகை இறக்குமதி செய்யப்பட்ட பனிக்கட்டிப் பாளங்களைப் பாதுகாப்பதற்காக பயன்பட்டது. இது 1842ம் ஆண்டு டுபுடர் ஐஸ் கம்பெனியால் கட்டப்பட்டது. 1874வரை வர்த்தகம் நடத்த இந்த மாளிகையை பிலிகிரி ஐய்யங்கார், விலைக்கு வாங்கி, ‘கேஸ்டில் கெர்னான்’ என்று பெயரிட்டார். தனது புகழ் பெற்ற சிகாகோ உரையை முடித்துவிட்டு கொல்கத்தா திரும்புவதற்கு முன் சென்னைக்கு வந்த விவேகானந்தர் இங்கு தங்கிச் செனாறார். இந்த மாளிகை 1930ம் ஆண்டு அரசின் பொறுப்புக்கு வந்தது. 1963ம் ஆண்டு, விவேகானந்தர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பெயர் இந்த மாளிகைக்கு சூட்டப்பட்டது. 1999 டிஸம்பர் 20ம் தேதி விவேகானந்தர் உருவச் சிலை இங்கு நிறுவப்பட்டது. இந்த நினைவாலயத்தின் மூன்றாவது தளத்தில் தியான மண்டபம் உள்ளது. நினைவு இல்லத்தைப் பார்க்க வருபவர்கள் இங்கு தியானம் செய்யலாம்.

 

ஒருமுறை சென்னை விஜயம் செய்து இத்திருத் தலங்களை தரிசிக்கும்படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.