/* ]]> */
Aug 272015
 

ஆகாச கருடன்:

AKAASA GARUDAN

நில்த்தில் விளையும் ஒரு கிழங்குக்கு ‘ஆகாச  கருடன்’ என்ற பெயர் உண்டு. ஏன் தெரியுமா? இதைக் கயிற்ல் கட்டி தொங்கவிட்டால் கருடன் பறப்பதைப்போல் இருக்கும். இந்தக் கிழங்குக்குக்கு  விஷத்தை முறிக்கும் ஆற்றல் இருக்கிறது. பாம்பு, தேள்,  பூரான் போன்ற விஷ ஜந்துக்களால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, ‘ஆகாச கருடன்’ கிழங்கை சிறிய அளவு சாப்பிடக் கொடுக்கவேண்டும். இது கடுமையான கசப்பு சுவை கொண்டது என்பதால், உடனே வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏறப்ட்டு விஷம் முறிந்துவிடும். இந்தக் கிழங்குக்குக்கு நிறைய மருத்துவக் குணங்கள் உண்டு என்றாலும், மருத்துவர் மேற்பார்வையில் சாப்பிடுவது நலல்து.

மருந்து இல்லா மனிதர்கள்:

வெளி உலகத் தொடர்பே இல்லாமல், லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் உள்ள அமேசான்’ காட்டுக்குள் ஓர் இனம் வசிக்கிறது. அவர்களை கண்டுபிடித்த ஆளில்லா விமானம் தாழ்வாகப் பறந்தபோது, வில் அம்புகளால் தாக்கவும் முயற்சித்தனர். இவர்கள் எந்த மருந்தும் பயன்படுத்தாமல் இருப்பதால், உடல் மற்றும் ரத்தம் நோய் எதிர்ப்புத் திறன் கொண்தாக இருக்கும் எனக் கருதும் விஞ்ஞானிகள்ஆய்வு செய்வதற்கு படையெடுத்து வருகிறார்கள். ஆனால், பெரு அரசு,” அவர்களை தந்தரவு செய்யாதீர்கள். விருப்பம் போல் வாழட்டும்” என்று கூறி இருக்கிறது.

^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>