அவன் முரணானவன்
அவன்
முரணானவன் !
அவன்
ஆன்ம பயணம் போகத் துடிப்பவன்
ஆனாலும் – அதில்
ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்படுபவன் !
வெள்ளைத்தாளில்
கறுப்பு மை ………..
கறுப்புத் தாளில்
வெள்ளை மை …….
இப்படித்தான்
இலக்கியம் படித்திருப்பீர்கள் !
மை தீர்ந்த பேனா உதறலின்
காகிதச் சிதறல் மை
அவனுடைய இலக்கியம் !
ஒரு சின்ன நொடிப் பொழுதின்
அழகு ஜனனத்தை
ஆராதிக்கும்
கவித்துவம் உண்டு அவனிடம் !
ஆனாலும்…
நூற்றாண்டு வரலாற்றை
நூல்கண்டில் சுற்றி
கயிறு திரிக்கும்
கள்ளமை அதிகம் அவனிடம் !
கூட்டத்தில் தனிமை தேடுதலும்
தனிமையில் கூட்டம் கூட்டுதலுமான
தோழமைக் குழப்பங்கள் அவனிடம் உண்டு !
பிரிவில் கூடல் தேடுதலும்
கூடலில் பிரிவை நாடுவதுமான
காதல் கயமைக்கும் குறைவில்லை !
தேடல் பொருளாய்
அலைபன் இங்கு
பாடல் பொருளாய்
ஆனதன் காரணம்…
அவன்
கல்லறையில் எழுத
காத்திருக்கும் வாக்கியம்…
“வாழ்வை
புரிந்தானில்லை
வாழ்வில் வென்றானில்லை
ஆனால்
ஒவ்வொரு நொடியும்
வாழ்ந்தவன் இவன் !”
அவன்
முரணானவன் !
- அபி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments














செம .. செம .. கலக்கல் அபி .. ரொம்ப நல்லா இருக்கு
5005 கவிஞர்கள்
ஆசிரியர்களாக
இணைந்துப் படைக்கும்
புது படைப்பிற்கு (உலகப்
பதிவிற்கு) 20
வரிகளுக்குள் கவிதைகள்
வரவேற்கப் படுகின்றன.
வண்ணப் படத்துடன் கவிதை
வெளியிடப்படும்
நாள் : 14-01-2013.
கவிதைகள் வந்து சேர
வேண்டிய கடைசி
நாள் : 25-09-2012.
அரசியல் மதம் சாராத கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . தாங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை இருக்கலாம்
முகவரி
செ.பா.சிவராசன்,
எண்-42,ஆவடி,சென்னை-62.
mail : cpsivarasan@gmail.com
விளம்பரங்கள் ஏற்றுக்
கொள்ளப்படும்.
தொடர்புக்கு : 8438263609
http://www.vahai.ewebsite.com
Good opportunity to Poets. 5005 Poets will write one
book for world record.Pls sent one good poem
(20 Lines) with your age and address
to C.P.Sivarasan,No.42, Avadi,Alamathi Road,Ch-62. Poems publish with color
picture. No charges. Last date on 25-09-2012.
Poems Publish will be on 14-01-2013
Advertisements will be accepted