/* ]]> */
Sep 192017
 

அழும்போது வருவதுபோல சிரிக்கும்போதும் ஏன் கண்ணீர் வருகிறது?

சிரிக்கும்போதும் ஏன் கண்ணீர் வருகிறது

மன வருத்தம் அல்லது மிகை மகிழ்ச்சி என்ற இரண்டு மனக் கிளர்ச்சி நிலைகளிலும் கண்ணீர் வரும். உடல்வலி அல்லது மன அழுத்தம் போன்ற கொந்தளிப்பு நிலையில் மனதின் அழுத்தத்தைக் குறைத்து , அமைதியை ஏறப்டுத்த கார்டிசோல் (cartisol) அட்ரீனலீன் (Adrenaline) ஆகிய இரண்டு ஹார்மோன்கள் சுரக்கின்றன.இவை சுரக்கும்போது இதயத் துடிப்பு அதிகமகி, ஆழமான மூச்சு விடுவதற்காக நுரையீரல் விரிகிறது. கிளர்ச்சிநிலை மறைந்து, அமைதிநிலை ஏற்படவும் இந்த ஹார்மோன்கள் உதவுகின்றன. இதே ஹார்மோன் கண்ணீரையும் தூண்டுகிறது. எனவே மிகை மகிழ்ச்சி நிலையில் , ‘ஆனந்தக் கண்ணீர்’ வருகிறது. தனிமையில் கண்ணீர் விடுவதும்  , வாய்விட்டுச் சிரிப்பதும் குறைவு.. நெருக்கமானவர்கள் முன்னிலையில்தான் கண்ணீர் விடுகிறோம். வாய்விட்டுச் சிரிக்கிறோம். இரண்டு மன நிலையையும் வெளிப்படையாகக் காட்டுவதால், அடுத்தவர் நமது மன நிலையை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது கண் சிமிட்டல், போல இதுவும் அனிச்சை செயலே. எவ்வளவு அடக்கினாலும், கண்ணீரையும் சிரிப்பையும் நிறுத்த முடியாது.எனவே நாம் பாசாங்கு செய்யவும் முடியாது.

சமூக விலங்காகப் பரிணமித்துள்ள நாம் இவ்வாறு ஒருசில உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டுவதன் மூலமே, சமூகக் கட்டுக்கோப்பை ஏற்படுத்த முடியும். எல்லாம் பாசாங்கு என ஒருவர்மீது ஒருவர் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை கொள்ளும் சமயத்தில், சமூக ஒற்றுமை ஏற்படாது. கண்ணீர் விடும்போது மனது கிளர்வு நலையில் உள்ளது என்பதை அருகே இருப்பவருக்கு எடுத்துக் காட்டுவதற்காக பரிணாம வளர்ச்சியில் உருவானதே கண்ணீர் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>