/* ]]> */
Oct 172012
 

அனைவருக்கும் வணக்கம்,

என்னுடைய முதல் கவிதை நூல் ‘அழகு ராட்சசி’ வரும் வெள்ளிக்கிழமை (19-10-2012) அன்று வெளிவரவிருக்கிறது.

மகாகவி மாத இதழின் ஆசிரியரும் உலகச் சிற்றிதழ் சங்கத் தலைவரும் ஓவியா பதிப்பக உரிமையாளரும் கவிஞரும் எழுத்தாளருமான திரு. வதிலைபிரபா ஐயா அவர்கள் சென்னைக்கு வருகை தரவிருக்கிறார். மிகவும் எளிமையாக, ஐயாவின் கைகளால் நான் என்னுடைய முதல் கவிதைநூலின் முதல் படியை (பிரதியை) பெற்றுக் கொள்ளப் போகிறேன். உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறேன். வரவேற்கிறேன்.

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.

கவிதைகளின் வகை: புதுக்கவிதைகள்

விலை: ரூ. 60.

பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்.

அணிந்துரை எழுதியவர்கள்: 

திரு. வதிலைபிரபா அவர்கள்.
திரு. மன்னார் அமுதன் அண்ணா.

அண்ணா என்மீது நிறைய அன்பு கொண்டவன்.

சிக்கலான குடும்பப் பொருளாதாரச் சூழலிலும் என் தாய்மொழி தமிழின் மேல் உள்ள தணியாத ஆவலில் என் சக்திக்கு மீறிய செலவில் பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின், போராட்டத்திற்குப் பின் என்னுடைய முதல் கவிதைநூலை வெளியிடவிருக்கிறேன்.

இந்தக் கவிதைநூல் விற்பனையிலிருந்து ஒரு பகுதியை கீழ்க்கண்ட ஒவ்வொன்றிற்குமோ அல்லது ஒரே நேரத்தில் அனைத்திற்குமோ பயன்படுத்தத் திட்டமிட்டுருக்கிறேன்.
1.    சிவானந்த குருகுலம் போன்ற பல ஆதரவில்லாத குழந்தைகள் இல்லங்களின் குழந்தைகளின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்தவரை  பொருளுதவிகளைச் செய்தல்
2.    ஈரநெஞ்சம் போன்ற சமுதாயத் தொண்டுநிறுவனங்களுக்கு என்னால் முயன்ற பொருளுதவிகளைச் செய்தல்
3.    போன்ற இணையதளங்கள் மூலமாகவோ அல்லது சிவானந்தா குருகுலம் போன்ற இல்லங்களின் மூலமாகவோ என்னால் முடிந்தவரை குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தல்.
4.    சிற்றிதழ்களுக்கு என்னால் முடிந்தவரை பொருளுதவிகளைச் செய்தல். (எனக்கும் சில மாதங்கள் ஒரு சிற்றிதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய அனுபவமுண்டு. பொதுவாகவே சந்தா செலுத்தினாலோ அல்லது நம் படைப்பு ஏதேனும் வெளிவந்தால் மட்டுமே இதழ்கள் நம்முடைய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், இவை இரண்டுமின்றியே, பாவையர் மலர், நம் உரத்தசிந்தனை, ஏழைதாசன் உள்ளிட்ட பல சிற்றிதழ்கள் என்மீதுள்ள அன்பால் எனக்கு தொடர்ந்து தங்களின் இதழ்களை அனுப்பி என் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுகின்றன. இவர்களுக்கெல்லாம் நான் நிறையவே கடன்பட்டிருக்கிறேன்.)

இந்த மின்னஞ்சலைப் படிப்பவர்களில் மேற்சொன்ன என் எண்ணமொத்தவர்கள் என்னுடைய முகவரிக்கோ அல்லது என் அலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொள்ளுங்கள். நாம் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பல சமுதாயப் பணிகளை நாம்மால் இயன்றவரை செய்யலாம்.

இதுதவிர, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இரத்ததானம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன். கண்தானம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன். நெருக்கடியான பணிச்சூழலில் நான் கடந்த சில வாரங்களாக இருப்பதால் கண்தானம் செய்யவேண்டும் என்ற என்னுடைய எண்ணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றது.
இந்த மின்னஞ்சலைப் படிக்க வாய்ப்புக் கிடைக்கும் இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், என் எண்ணமொத்த சமூக அக்கறையுள்ளவர்கள் என் கவிதைநூல் வெளிவரவிருப்பதை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் தெரியப்படுத்துங்கள். இந்த மின்னஞ்சலைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நிச்சயம் வாங்கிப் படிப்பார்கள்.

இந்த மின்னஞ்சலைப் படிக்க வாய்ப்புக் கிடைக்கும் பத்திரிகையாளர்கள் என்னுடைய கவிதைநூலைப் பற்றி உங்கள் இதழ்களில் விமர்சனம் செய்யவும் வேண்டிக் கொள்கிறேன். இதன்மூலம் பலரும் என்னுடைய கவிதைநூல் வெளிவந்திருப்பதைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

என்னுடைய தற்காலிக சென்னை முகவரி:

முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
அறை எண் 37,
#53, மில்லத் மேன்சன்,
பெரிய தெரு, திருவல்லிக்கேணி,
(இந்து மேல்நிலைப்பள்ளி எதிரில்)
சென்னை – 600005
அலைபேசி: 8754962106.

கவிதைநூலினை வாங்கிப் படியுங்கள். சமூக அக்கறையுள்ள என் எண்ணங்கள் ஈடேற எனக்கு உதவி செய்யுங்கள்.

வாழும்வரை நாமும் நம் குடும்பமும் நலமுடன் வாழவேண்டும். அதே நேரத்தில் நம்மால் முடிந்தவரை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு பயனுள்ளவனாக வாழ வேண்டும். நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக படைப்புகளை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு.

கடந்த சில ஆண்டுகளாகவே மிக மிக சிக்கனமாக அவ்வப்போது சில நாட்கள் தொடர்ச்சியாக கொலைப்பட்டினி கிடந்து சேர்த்த பணம்தான். ஆனாலும், நான் கவிதைநூல் வெளியிட்டிருக்கிறேன் என்ற ஆத்மதிருப்தி போதும் எனக்கு.

=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி – 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8754962106.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>