மதுரை கலெக்டர் சகாயம் ‘தயா எஞ்சினியரிங் காலேஜ் மதுரையின் நீர்வளத்தை பாதிக்கிறது என்று மதுரை மாவட்ட விவசாயிகள் சங்க செயலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை கலேக்டர் சகாயம் அழகிரி குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பியிருக்கிறார். அதில் ,நீர்வளம் குன்றினால், கிராம விவசாயம் பாதிக்கப்படும் என்றும் கிராமங்களின் முக்கியத்தைப் பற்றி காந்தியடிகள் கூறியவற்றையும் குறிப்பிட்டிருந்தார். சம்மனை எதிர்த்து கோர்ட்டுக்குப் போயிருந்தது அழகிரி தரப்பு. அதனை விசாரித்த நீதிபதி , காந்தியடிகளைப் பற்றி க் குறிப்பிட்டிருந்ததை நீக்கிவிட்டு நோட்டீஸ் அனுப்பும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருத்தியமைத்த நோட்டீஸை அழகிரி, அவரது மனைவி, அவருடைய மகன் துரை தயாநிதி ஆகியோருக்கு அனுப்பியிருந்தார், கலெக்டர் . அதன்படி ,அழகினி தரப்பினர் ஜனவரி 4-ம் தேதியன்று கலெக்டர் அலுவலகத்தில் ஆஜராகவேண்டும் . தயா எஞ்சினியரிங் கல்லூரியின் அறக்கட்டளை மெம்பர்களுக்குத்தான் நோட்டீஸ் அனுப்பியிருக்கவேண்டும் .ஆனால், அழகிரிக்கும் குடும்பத்தினருக்கும் நோட்டீஸை அனுப்பியது உள்நோக்கம் கொண்டதாகவே கருதப்படுகிறது என்ற குற்றச்சாட்டு அழகிரி தரப்பிலிருந்து வரவும், கலக்டரோ, நான் பாரபட்சமற்று தான் செயல்படுகிறேன் என்று சொல்கிறார். எது எப்படியிருப்பினும், ‘தயா’ விடாமல் அழகிரியைத் துரத்துகிறது.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments