/* ]]> */
Jul 062012
 

திரைப்பட தயாரிப்பாளர்கள் – தொழிலாளர்கள் இடையேயான இழுபறியால் இந்த  வருடம் பெரிய பட்ஜெட் படங்கள் பெரிதாய் வராத நிலையில் சிறிய முதலீட்டு படங்கள் நிறையவே ரிலீஸ் ஆகியிருந்தாலும் , அவற்றுள் வழக்கு எண் 18/9 ,ராட்டினம் தவிர மற்றவையெல்லாம் வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவியிருக்கின்றன …

வேலாயுதத்தை தொடர்ந்து  நண்பன்   வணிக ரீதியான வெற்றியை கொடுத்ததோடு , வழக்கமான பாணியிலிருந்தும்  சற்று மாறி விஜய்க்கு தோள் கொடுத்திருக்கின்றான்   …  வேட்டை யுடிவியிடம் பெரிய விலைக்கு விற்கப்பட்டாலும் , திரைக்கதையை பொறுத்தவரை வேகத்தடையாகி போனதால்  ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பை பெறவில்லை …

மெரினா  மூலம் பாண்டிராஜ் ஒரு தயாரிப்பாளராக ஜெயித்த போதும் இயக்குனராக அவரின்   மெரினா  அலைகள்  கால் தொடவில்லை … எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் – 2012  இல் இருந்த  தோனி அரவான் இரண்டுமே அதை பூர்த்தி செய்யாமல் போனதில் வருத்தமே , அதே போல நல்ல முயற்சியான  அம்புலி அரை  நிலவாய் போனதும் துரதிருஷ்டமே …

கழுகு பறந்த உயரம் குறைவாக இருந்தாலும் பாடல்கள் மற்றும் எடுக்கப்பட்ட விதத்தால் இயக்குனர் சத்ய சிவாவிற்கு நல்ல பெயரோடு சேர்த்து அடுத்த படத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது … குறும்படமாக நல்ல பெயரை பெற்ற காதலில் சொதப்புவது எப்படி படமாகவும் சொதப்பாமல் வசூலை பெற்று குறும்படம் எடுப்பவர்களுக்கிடையேயும் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது …

வெறும் பாடல்களும் , பப்ளிசிட்டியும் மட்டுமே படம் ஓடுவதற்கு போதுமானதாகி விடாது என்பதை முப்பொழுதும் உன் கற்பனைகள் , 3 இரண்டுமே நிரூபித்திருக்கின்றன , அதிலும்  3 – ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி  என்று சொல்லுமளவிற்கு ரசிகர்களை வெறுப்பேற்றி விட்டது …  கர்ணன்  நூறு நாட்களுக்கும் மேல் ஓடி காலத்தால் அழியாமல் எல்லோர் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டான் …

ராஜேஷ் தனக்கு எது வருமோ அதை சரியாக செய்து   ஒரு கல் ஒரு கண்ணாடி  யை டபுள் ஓகே செய்துவிட்டார் . இவருடைய பாச்சா அடுத்தமுறை பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . இதே பாணிக்கு பெயர் போன சுந்தர்.சி யின்  கலகலப்பு வெற்றி பெற்றதிலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை … அர்பன் ரொமாண்டிக் ஸ்டோரியை ஸ்டைலாக சொன்ன விதத்தில்  லீலை ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம்…

தரமான படங்களின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் தீராத பசியை தீர்த்து வைத்த வகையில்  வழக்கு எண் 18/9 – வளர்ச்சிக்கான பாதை   ராட்டினம் சுற்றலாம்  என்ற போதும் அழகி , விடிவி வரிசையில் ஒரு படம் என்றெல்லாம் சொல்லுமளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை .  கிருஷ்ணவேணி பஞ்சாலை  நேர்த்தியாக நெய்யப்பட்டிருந்தால் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பாள்…

பில்லாவின் ரிலீஸ் தேதியையே ஒத்திப் போடுமளவிற்கு ஓவர் பில்ட் அப்புடன் வந்த சகுனி ரசிகர்களை சலிப்பூட்டியதை தவிர வேறோன்றும் உருப்படியாக செய்யவில்லை … வருட முடிவிற்குள் வருமென்று எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுள் கமலின் விஸ்வரூபம் , அஜித் நடிப்பில் பில்லா 2 , விஜய் நடிப்பில் துப்பாக்கி , சூர்யா நடிப்பில் மாற்றான் இவைகளெல்லாம் மிக முக்கியமானவை …

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>