/* ]]> */
Jun 302013
 

அரசியல் – திமுக பாதை கூட்டணி எதிர்கட்சி தலைவர் ..

 எதிர்கட்சித் தலைவர்:
         இப்போது தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் திமுகவின் பலம் 23 ஆகவும் உள்ள நிலையில் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் ஆகிவிட வாய்ப்புள்ளது. இது பற்றிய அறிவிப்பை அதிமுக விரைவில் வெளியிடலாம்.
Karunanidhi and chidambaram

Karunanidhi and chidambaram

  கூட்டணி யாருடன்?
          ராஜ்ய சபா தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்துள்ள நிலையில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய கேள்வி அனைவர் நெஞ்சிலும் தலைதூக்கியுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸுடைய நிலைப்பாடு சரியில்லை என்றுதானே, திமுக கூட்டணியிலிருந்தும் மத்திய அரசிலிருந்தும்  திமுக வெளியேறியது. இப்போது எப்படி ராஜ்ய சபா தேர்தலுக்காகக் கூட்டு சேர்ந்தார்கள் என்று தமிழ்நாட்டில் கேட்கிறார்கள். இதையே வட இந்தியாவில் கொஞ்சம் மாற்றிக் கேட்கிறார்கள். 2ஜி.யில் சிக்கியிருக்கும் கனிமொழியை எப்படி காங்கிரஸ் ஆதரிக்கிறது? ஒருவேளை 2ஜி.யில் காங்கிரஸுக்கும் கூட்டு உண்டோ என்கிறார்கள்.இதற்கு காங்கிரஸின் பதில் என்னவென்றால், கனிமொழியின்மீது குற்றம்தான் சுமத்தப்பட்டிருக்கிறது. தீர்ப்பு ஏதும் வழங்கப்படவில்லையே என்கிறார்கள். எனவே ராஜ்ய சபா தேர்தலுக்கும் லோக்சபா தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள்.
              திமுகவின் பதில் எனன்வென்றால், கூட்டணியைவிடடு வெளியேறிய பிறகும் , காங்கிரஸை, அந்நிய முதலீட்டு மசோதாவுக்காக ஆதரவளித்து அரசு கவிழாமல் காப்பாற்றினோம் அதுபோல இன்னும் வரப்போகும் மசோதாக்களையும் ஆதரித்து அரசைக் கவிழாமல் காப்பாற்றுவோம். அதற்கு கைமாறாகத்தான் இந்த ஆதரவு என்கிறார்கள். ஆனால், திமுக தொண்டர்கள் எனன் நினைக்கிறார்கள்? காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகியதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அடுத்து வந்த ராஜ்ய சபா தேர்தலில் திமுக ஜெயிக்கவேண்டும் என்று நினைத்தார்கள், ஆனால், லோக்சபா தேர்தலில் என்ன நடக்கும் என்ற சிந்தனையில் உள்ளார்கள்.
        ராஜ்யசபா தேர்தலில் திமுகவுக்கு எந்த நிபந்தனைகளும் எதிர்பார்ப்புகளுமின்றித்தான் ஆதரவு கொடுத்தோம் என்று காங்கிரஸ் டஹ்ரப்பில் கூறுகிறார்கள்.
             பார்லிமெண்ட் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி என்பதே இப்போதைய தலையாய கேள்வி.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>