அரசியல்:
திகார் செய்திகள்:
1. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றதும் குடும்பம் மொத்தமும் கொஞ்சம் அல்ல, நிறையவே ஆடிப்போய்விட்டது. கணவர் அரவிந்தன் உருகி உருகி கனிமொழியின் மனநிலையையும் அவருடைய சோகங்களையும் கருணாநிதியிடம் கோபாலபுரத்துக்கு வந்து , மற்ற குடும்ப உறவுகளுக்கு மத்தியில் இறக்கி வைத்திருக்கிறார். அவர் அங்கிருந்து புறப்பட்டு சி.ஐ.டி. காலனிக்குப் போனபின்பு, குடும்ப உறவுகளிடம் கண்ணீர் சிந்தியிருக்கிறார், கருணாநிதி.
2. கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று மற்றவர்கள் சொன்னதை நம்பி, டெல்லிக்குப் போன ஸ்டாலின் கோர்ட்டுக்குப் போகவில்லை. செய்தியைத் தெரிந்துகொண்டபின் மிகவும் அப்செட். இதைக்கூட முன்கூட்டியே தெரிந்து சொல்ல முடியலியே என்று , கூட இருந்தவர்களைக் கடிந்துகொண்டாராம். பிறகு, மாலையில் சிறைக்குப் போய் கனியைச் சந்தித்தாராம். இருவரும் கண்ணீரிலேயே கழித்தனராம். கட்சியினரும் குடும்பத்தினரும் கனிமொழியின் துயரத்தைப் பங்கிட்டுக்கொள்வதாகவும் கூறினாராம்.
3. மற்றவர்களைப் போலவே நம்பிக்கையிலிருந்த அழகிரியும், கவலைப்பட்டாராம். திகாருக்குப் போகவில்லையே ஒழிய டெல்லி புள்ளிகளுக்கு டோஸ் விட்டதாகத் தெரிகிறது. உயர்நீதிமன்றத்தில் மனுப்போடவேண்டாம் என்று எல்லோரும் சொன்னாலும் கூட கடைசியாக அதையும் செய்து பார்க்கவேண்டும் என்று தந்தையிடம் வற்புறுத்துகிறாராம்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments