/* ]]> */
Mar 132014
 

நடிகை நமீதாவின் அரசியல் பிரவேசம்:

nameetha with mike
‘ எங்கள் அண்ணா’ படத்தின்மூலம் விஜயகாந்துடன் சேர்ந்து திரை உலகுக்கு அரிமுகமானார், நமீதா. அது முதல், கதாநாயகி, கவர்ச்சி வேடங்கள், குணச் சித்திர வேடங்கள் என பல வேடக்களிலும் கலக்கினார். ஆனால், நல்ல நடிப்புத் திறமையிருந்தும், திரைப்பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. எனவே, கலைநிகழ்ச்சிகளுக்கு வி.ஐ.பியாக தலைமை தாங்குவது, கடைகள் திறப்புவிழாக்களுக்கு செல்வது மட்டுமே செய்து வருகிறார்.
ஒருமுறை அரசியலில் சேர தனக்கு விருப்பமுள்ளதைத் தெரிவித்திருந்தார். ஆனால் எந்த கட்சி என்று குறிப்பிடாததால், மூன்று முண்ணனி கட்சிகள் லோக் சபா தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய, இவருக்கு அழைப்பு விடுத்தன. அவர்களிடம் நமீதா,” இப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. இந்திய அரசியல் ஓரளவு தெரியும் .தமிழக அரசியல் பற்றி அவ்வளவாகத் தெரியாது.” என்று கூறினார்.. அரசியல் கட்சி எதுஎன்று அவர் வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும், அவருக்கு முண்ணனி கட்சி ஒன்றில் சேர விருப்பம் உள்ளது. ஒன்றரை ஆண்டாக எந்த மொழிப் படங்களும் இல்லை. சும்மா இருப்பதைவிட , குஷ்பூ, ரோஜா, விஜயசாந்தி போல ஏதாவது ஒரு கட்சியில் சேர்வது நல்லது என்று அவருக்கு நண்பர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால் தற்போது தமிழக அரசியல் கட்சிகளைப் பற்றிய புத்தகங்களை வாங்கிப் படிக்கிறார். எந்தக் கட்சி அவருடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிறதோ, அந்தக் கட்சியில் சேருவார் என எதிர்பார்கக்ப்படுகிறது. அநேகமாக திமுக அல்லது அதிமுகவில் சேருவார் என நண்பர்கள் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>