/* ]]> */
Aug 122017
 

அமைதி நேரம்:

AUTISM HOUR-02-10:

autism

ஆட்டிசம் எனும் வளர்ச்சிக் குறைபாடு தற்போது குழந்தைகளைப் பரவலாகப் பாதித்து வருகிறது. இக் குழந்தைகளை ஒதுக்கவோ புறந்தள்ளவோ கூடாது என்பதை வலியுறுத்தி, உலகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விழிப்புணர்வின் ஒரு நிகழ்வாக இங்கிலாந்தில் , பெரிய நிறுவனங்கள் அக்டோபர் 2ம் தேதி அன்று ஒரு மணி நேரத்தை அமைதி நேரமாக (Quet Hour) அறிவித்துள்ளன.

இங்கிலாந்தின் தேசிய ஆட்டிச சங்கத்தின் முயற்சியால், அன்று ஆட்டிச விழிப்புணர்வு நிகழ்வுகள் நாடெங்கும் நடைபெற உள்ளன. அதன் ஒரு பகுதியாக, ஆட்டிசக் குழந்தைகளைப் பாதிக்கும், கண்கள் கூசும் விளக்கொளி, சத்தமான சங்கிதம் போன்றவற்றை ஒரு மணி நேரத்துக்கு கடைகளில் தவிர்க்க முடிவு செதுள்ளனர்.

இண்டு சென்டர் (Intu centre)  என்றழைக்கப்படும் சங்கிலித் தொடர் வணிக வளாகங்கள் இங்கிலாந்து முழுவதும் கிளை பரப்பி உள்ளன. இதற்கு சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் நன்றியையும் பராட்டுகளையும் இப்போதிருந்தே தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>